IND vs SL, 1st T20 Live : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ளது.

ABP NADU Last Updated: 24 Feb 2022 10:41 PM
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி : 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அரைசதம் அடித்த அசலங்கா...

இந்திய அணிக்கு எதிராக தனி ஒரு வீரராக போராடி இலங்கை வீரர் அசலங்கா 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

IND vs SL: 15 ஓவர் முடிவில் இலங்கை அணி - 905...

15 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

10 ஓவர் முடிவில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இலங்கை அணி பரிதாபம்...

இலங்கை அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 57 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

IND vs SL:இலங்கை 7 ஓவர் முடிவில் - 363

இலங்கை அணி 7 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

IND vs SL : இரண்டாவது விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை...

13 ரன்கள் அடித்திருந்த கமில் மிஷாரா புவனேஸ்வர்குமார் வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

முதல் பந்தில் முதல் விக்கெட்... கலக்கிய புவி..!

200 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது. 

இலங்கை அணிக்கு 200 ரன்கள் இலக்கு...

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். 

கிஷன் கிளம்பினார் 89 ரன்களில்...

ஷனகா வீசிய 17 வது ஓவரில் இஷான் கிஷன் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து 89 ரன்களில் லியான்ஜேவிடம் கேட்ச் ஆனார். 

ரோஹித் ஷர்மா 44 ரன்களில் அவுட்..

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 44 ரன்களில் லஹிரு குமாரா வீசிய 12 வது ஓவரில் கீளீன் போல்ட் ஆனார்.

இலங்கை அணிக்கு எதிரான 1 டி20 : 10 ஓவர் முடிவில் இந்தியா - 98/0

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 41 ரன்களுடனும், இஷான் கிஷன் 55 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணிக்கு எதிரான 1 டி20 : 10 ஓவர் முடிவில் இந்தியா - 98/0

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 41 ரன்களுடனும், இஷான் கிஷன் 55 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.

அரைசதம் அடித்த இஷான்...

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 

IND vs SL, T20 Live: அடுத்தடுத்த பந்து.. தெறிக்கவிட்ட இஷான் கிஷன்..!

கருணரத்னே வீசிய 3 வது ஓவரில் இஷான் கிஷன் அடுத்தடுத்து மூன்று பௌண்டரிகளை அடித்து அசத்த, இந்திய அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி..

இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி முதல் ஓவர் முடிவிற்கு விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது. 

Background

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது இலங்கையுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதற்காக இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முன்னணி வீரர் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முகமது ஷமி, ஷிகர்தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இஷான்கிஷான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வரிசையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் ஒன்டவுனில் இறங்குவார். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சநன், ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார்கள். ஆல்ரவுண்டர்களான வெங்கடேஷ் அய்யரும், ரவீந்திர ஜடேஜாவும் பின்வரிசையில் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.