தொடர் அரசியல் பணிகள் காரணமாக பிஸியாக இருந்து வந்த ராகுல் காந்தி, அதிலிருந்து பிரேக் எடுக்கும் வகையில் டெல்லியில் உள்ள உணவகத்திற்கு தனது குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சென்றுள்ளார்.


மக்களவை தேர்தல், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற கூட்டத்தொடர் என அடுத்தடுத்த அரசியல் பணிகள் காரணமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிஸியாக இருந்து வந்தார். இந்த நிலையில், அதிலிருந்து பிரேக் எடுக்கும் வகையில் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் உள்ள குவாலிட்டி உணவகத்திற்கு சென்றுள்ளார் ராகுல் காந்தி.


ராகுல் காந்தியின் ஃபேமிலி டைம்:


அவருடன் அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, மகள் மிராயா வதேரா மற்றும் அவரது மாமியார், குவாலிட்டி உணவகத்தில் உணவருந்தினர். சோலா பூரி உள்ளிட்ட உணவு வகைகளை அவர்கள் ருசித்தனர்.


குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போன்ற சில புகைப்படங்களையும் ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான உடனே, அந்த படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.


"சோலா பூரி ட்ரை பண்ணுங்க"


ராகுல் காந்தி, தனது குடும்பத்தினருடன் உணவகத்தில் அமர்ந்து சிரித்து கொண்டே சாப்பிடுவது புகைப்படங்களில் பதிவாகியுள்ளது. சோனியா காந்தி புன்னகையுடன் சிரிப்பதும், அதே நேரத்தில் ராபர்ட் வதேரா சோலா பூரியை விழுங்குவதும் போட்டோவில் பதிவாகியுள்ளது.


 






எக்ஸ் தளத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்ட ராகுல் காந்தி, "புகழ்பெற்ற குவாலிட்டி உணவகத்தில் குடும்பத்துடன் மதிய உணவு. உணவகத்திற்கு வந்தால் சோலா பூரியை முயற்சிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.


டெல்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ளது குவாலிட்டி உணவகம். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் அடிக்கடி தேடி சென்று சாப்பிடும் உணவகமாக குவாலிட்டி ஓட்டல் இருந்துள்ளது.


இதையும் படிக்க: Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!