தமிழ்நாடு அரசு சார்பில்‌ உணவுத்‌ திருவிழா சென்னை, மெரினா கடற்கரையில்‌ கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 24 வரை  நடைபெற உள்ளது.  


சென்னை உணவுத் திருவிழா:


சுய உதவிக்‌ குழுக்கள்‌ மூலம்‌ தயாரிக்கப்படும்‌ தரமான உணவுகள்‌, முன்னணி உணவகங்களின்‌ உணவு வகைகளின்‌ தரத்திற்கு சற்றும்‌ குறைவில்லாமல்‌ அவற்றிற்கு இணையாக சுவையும்‌, தரமும்‌ நிறைந்த உணவுகளை முறையான பயிற்சி பெற்று சுகாதாரமான முறையில்‌ தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ உணவுப்‌ பொருட்களை அனைவரும்‌ அறிந்திட வேண்டும்‌ என்ற நோக்கத்துடனும்‌, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்‌ சார்பில்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ உணவுப்‌ பொருட்களின்‌ உணவுத்‌ திருவிழா, 20.12.2024 முதல்‌ 24.12.2024 வரை சென்னை, மெரினா கடற்கரையில்‌ நடைபெற்று வருகிறது. 


மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களின்‌ உணவுத்‌ திருவிழாவை துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  



Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?



உணவு வகைகள் என்ன?:



கோவை கொங்கு மட்டன்‌ பிரியாணி,


கிருஷ்ணகிரி நோ ஆயில்‌ நோ பாயில்‌,


களூர்‌ தோல்‌ ரொட்டி - மட்டன்‌ கிரேவி,


நாமக்கல்‌ பள்ளிப்பாளையம்‌ சிக்கன்‌,


தருமபுரி ரவா கஜூர்‌,


நீலகிரி ராகி களி - அவரை குழம்பு,


திருப்பூர்‌ முட்டை ஊத்தாப்பம்‌,


காஞ்சிபுரம்‌ கோவில்‌ இட்லி,


சிவகங்கை மட்டன்‌ உப்புக்கறி,


புதுக்கோட்டை சுக்குமல்லி காபி,


ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி,


வேலூர்‌ ராகி கொழுக்கட்டை,


மதுரை கறி தோசை,


விருதுநகர்‌ கரண்டி ஆம்லெட்‌,


தஞ்சாவூர்‌ பருப்பு உருண்டை குழம்பு,


திருச்சி நவதானிய புட்டு,


மயிலாடுதுறை இறால்‌ வடை,


நாகப்பட்டிணம்‌ மசாலா பணியாரம்‌,


கன்னியாகுமரி பழம்‌ பொறி,


சென்னை தயிர்‌ பூரி உள்ளிட்ட 100க்கும்‌ மேற்பட்ட உணவு வகைகள் உள்ளன.


 






”மாட்டிறைச்சி இல்லை”



இந்நிலையில், உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சி மறுக்கப்படுவதாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீல பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து நீல பண்பாட்டு மையம் தெரிவித்ததாவது, “ சென்னை_மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?; பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள்.ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை  நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளது. 


”மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது”


இந்த விவகாரம், பெரிதும் சர்ச்சையான நிலையில், மாட்டிறைச்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு விழா ஏற்பாட்டு குழுவினரான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளதாவது “ கரூர் மாவட்ட உணவு அரங்கு எண்.17 இல் மாட்டிறைச்சி உணவும் விற்பனை செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டு குழுவு விளக்கமளித்துள்ளது. 


Also Read: Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?