அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள் வீசிய  8 பேரை காவல் துறையினர் செய்தனர்.


புஷ்பா-2 திரைப்படம் சிறப்பு காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுக்கையிட்டு உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரசிகையின் குடும்பத்திடம் அல்லு அர்ஜூன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர். அப்போது, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள், தக்காளி வீசினர். அங்கிருந்தவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 






அல்லு அர்ஜுன் வீட்டுன்முன் இருந்த பூந்தொட்டிகளை உடைத்தது அல்லு அர்ஜுன் மீதிருந்த கோவத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கிருந்தவர்களை கட்டுப்படுத்தினர்.


மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரேவதிக்கு நீதி கேட்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக்கோரியும் அவர்கள் கேட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே, அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த காரணத்தால், கடந்த 4ம் தேதி நள்ளிரவு தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.அந்த திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் படம் பார்க்க வந்தார். அல்லு அர்ஜூனை காண்பதற்காகவே அந்த திரையரங்கிற்கு அதிகளவில் ரசிகர்கள் கூடினர். ஹைதரபாத்தில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றிற்கு தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்த 39 வயதான பெண் ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெலங்கானா போலீசார் அல்லு அர்ஜூன் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.