71,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்ற உள்ளார்.


இளைஞர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்:


மத்தியில் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அடுத்தாண்டு இரண்டு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகள், இளைஞர் நலன்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நிதி அமைப்புகள் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 9 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


இதனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல திட்டமிடல்களை உருவாக்கி வருகிறது. அதன்படி கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.


71,000 பேருக்கு வேலைவாய்ப்பு:


சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரிய வந்ததால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார். 


இந்த நிலையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்பு திருவிழா அமைந்துள்ளது. தேச கட்டமைப்பு மற்றும் சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்கேற்புக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை இது வழங்கும்.


நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான பணி நியமனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது.


இதையும் படிக்க: Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்