IND vs SA 2nd T20I LIVE: சதம் கடந்த மில்லர்... வரலாறு படைத்த இந்தியா.. தென்னாப்பிரிக்கா தோல்வி
IND vs SA 2nd T20I LIVE Score: இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டாவது டி20 தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்..
தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் கடந்தார். இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
15 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் மில்லர் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
12 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் எய்டன் மார்க்கரம் 33 ரன்களில் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
5 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி அர்ஷ்தீப் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 1 ரன்னுக்கு 2 ரன்கள் என்ற இலக்குடன் அந்த அணி ஆடி வருகிறது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை விளாசியுள்ளது.
இந்திய அணிக்காக பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
18 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.
18 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
15 ஓவர்களின் முடிவில் இந்தியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்த போது கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க போட்டி நடைபெறும் கவுகாத்தி மைதானத்திற்குள் பாம்பு திடீரென புகுந்ததால் வீரர்களும், ரசிகர்களும், அம்பயர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளன.
3 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
2வது டி20 போட்டிகான தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி ஷம்சிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு மாற்றமில்லை.
இந்திய அணி விவரம்:
2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
82% ஈரப்பதம் மற்றும் 14 km/hr காற்றின் வேகத்துடன் போட்டி நாளில் வெப்பநிலை 27°C சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டின் போது மழை பெய்ய 30% வாய்ப்புகள் உள்ளன.
கவுஹாத்தியில் நடைபெறும் டி20 போட்டியில் இந்திய அணி இன்று டாஸ் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுஹாத்தியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
Background
பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே கடந்த புதன் கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 106 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 56 பந்துகளில் 51 ரன்களும், சூர்யகுமார் யாதவும் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற செய்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தற்போது 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், இந்திய அணி - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது.
மழை பெய்ய வாய்ப்பா..?
82% ஈரப்பதம் மற்றும் 14 km/hr காற்றின் வேகத்துடன் போட்டி நாளில் வெப்பநிலை 27°C சுற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டின் போது மழை பெய்ய 30% வாய்ப்புகள் உள்ளன.
பிட்ச் எப்படி..?
இதுவரை இரண்டு சர்வதேச போட்டிகளை மட்டுமே நடத்திய புதிய மைதானம் இது. பராஸ்பரா ஸ்டேடியத்தில் உள்ள மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சாகவே பார்க்கப்படுகிறது.
முதல் இன்னிங்ஸில் அதிக பட்ச ஸ்கோர் :
பராஸ்பரா ஸ்டேடியத்தில் சராசரி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் 140 ரன்கள் மட்டுமே..
இரண்டாவது இன்னிங்ஸ் எப்படி..?
இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி இங்கு சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. இந்த மைதானத்தில் 80 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய அணி ப்ளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர்
கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் லெவன் : குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிறிஸ்டியன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே
இந்தியாவில் தொடரை இழக்காத தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது வரை 3 டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. அந்தத் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-தென்னாப்பிரிக்கா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா 2-2 என வெற்றி பெற்று இருந்தன. அப்போது 5வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக அந்தத் தொடரும் 2-2 என சமனில் முடிந்தது. இதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் நடைபெற்றுள்ள டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி இழந்ததே இல்லை. அத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு முறை கூட கைப்பற்றாத சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த முறையாவது அந்த கனவை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -