IND vs SA 2nd ODI LIVE: அடுத்தடுத்து தோல்வி... ஒரு நாள் தொடரையும் பறிக்கொடுத்த இந்திய அணி
IND vs SA 2nd ODI LIVE Updates: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பான உடனக்குடன் தகவல்கள்.
43.2 ஓவர் - இந்தியா - 239/6
வெங்கடேஷ் அய்யர் 22 ரன்னில் அவுட்
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அடுத்தடுத்து அவுட். ஸ்கோர் விவரம்: 188/4 34.2 ஓவர்
100 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த ராகுல், ரிஷப். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இந்திய 22 ஓவரில் 115 ரன்கள் எடுத்து பொறுமையுடன் விளையாடி வருகிறது.
வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பிய கோலி. டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. 11.4 ஓவரில் தவான் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்கோர் விவரம் 63-1
முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9ஆவது ஓவரில் 50 ரன்கள் அடித்தது.
இந்திய அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 19 - ராகுல் - 12
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதனால் மீண்டும் ஷிகர் தவான் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த போட்டியில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் மார்கோ ஜென்சனுக்கு பதிலாக சிசண்டா மகாலா சேர்க்கப்பட்டுள்ளார்.
முழு விவரம்:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
முழு விவரம்:
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்பாக முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியது:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான், கோலி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது 138/1 என்ற ஸ்கோரிலிருந்து மோசமான பேட்டிங் காரணமாக 188/8 என்ற இருந்தது.இதனால் இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
Background
தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி கடந்த புதன்கிழமை போலண்ட் பார்கில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இதன்காரணமாக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியில் தோல்வி அடைந்தது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனால் இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -