IND vs PAK LIVE Score: கடைசி பந்தில் திரில் வெற்றி...! கிங் கோலியால் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

IND vs PAK T20 World Cup 2022 LIVE: உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ABP NADU Last Updated: 23 Oct 2022 05:26 PM
கடைசி பந்தில் திரில் வெற்றி...! கிங் கோலியால் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

கோலி அரை சதம்

கோலி அரை சதம் பதிவு செய்தார். அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என அரை சதம் பதிவு செய்தார்.

கடைசி 3 ஓவர்கள்

இந்தியாவுக்கு இன்னும் 18 பந்துகள் உள்ளன. இலக்கை எட்டிப்பிடிக்க 48 ரன்கள் தேவை. கோலியும், பாண்டியாவும் களத்தில் உள்ளனர்.


 





இந்திய அணியின் வெற்றிக்காக ஹர்திக் - விராட்கோலி போராட்டம்

இந்திய அணியின் வெற்றிக்காக ஹர்திக் பாண்ட்யா - விராட்கோலி ஜோடி போராடி வருகிறது.

10 ஓவர்கள் முடிவில் இந்தியா 45/4

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலியும், ஹார்திக் பாண்டியாவுக்கு களத்தில் உள்ளனர்.

அக்சர் படேல் ரன் அவுட்

சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல், வந்த வேகத்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களம் புகுந்துள்ளார்.

பெவிலியன் திரும்பிய சூர்ய குமார் யாதவ்

இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ரெளஃப் பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 

5 ஓவர்கள் முடிவில் இந்தியா 22 ரன்கள்

இந்தியா 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. நசீம் ஷா வீசிய ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போல்டு ஆனார். 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 7 ரன்கள் எடுத்துள்ளது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹார்திக் பாண்டியா

17 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.

15 ஓவர்களில் பாகிஸ்தான் 106/5

15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்துள்ளது பாகிஸ்தான்.

ஆட்டமிழந்தார் அரை சதம் பதிவு செய்த இஃப்திகார்

சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் வீசிய 12ஆவது ஓவரில் 3 சிஸ்கர்களை விளாசினார். அரை சதமும் பதிவு செய்தார். அடுத்த ஓவரை முகமது ஷமி வீச எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் இஃப்திகார்.

சிக்ஸரை பறக்க விட்ட இஃப்திகர்

ரவிச்சந்திர அஸ்வின் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் பாகிஸ்தான் வீரர் இஃப்திகர் அகமது.

10 ஓவர்கள் முடிவில் 60 ரன்கள்

பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.

அதிருஷ்டவசமாக தப்பிய மசூத்!

முகமது ஷமி வீசிய 8ஆவது ஓவரின் 3வது பந்தை ஷான் மசூத் தூக்கி அடித்தார். அஸ்வின் பாய்ந்து கேட்ச் பிடித்தார். எனினும், நூலிழையில் விக்கெட் வாய்ப்பு பறிபோனது. அனைவரும் விக்கெட் என்று கருதிய நிலையில், ரீப்ளேயில் பார்த்தபோது பந்து தரையில் பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுத்தார். 

அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்த விக்கெட்-4 ரன்களில் நடையைக் கட்டிய ரிஸ்வான்

அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் 4 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அர்ஷ்தீப் சிங்குக்கு இது 2 வது விக்கெட் ஆகும்.





அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்த விக்கெட்-4 ரன்களில் நடையைக் கட்டிய ரிஸ்வான்

அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் 4 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அர்ஷ்தீப் சிங்குக்கு இது 2 வது விக்கெட் ஆகும்.

பாபர் ஆனார் டக் அவுட்.. அசத்திய அர்ஷ்தீப் சிங்..!

அர்ஷ்தீப் சிங் தான் வீசிய முதல் ஓவர் முதல் பந்தே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை ரன் எதுவுமின்றி வெளியேற்றினார். 

முதல் ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி - 1/0

பாகிஸ்தான் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ரன்கள் எடுத்துள்ளது. 

பாகிஸ்தான் அணி விவரம்.!

இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்கள் விவரம்: 





இந்திய அணி விவரம்..!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய வீரர்கள் விவரம்: 


ரோகித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சார் படேல், அஷ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

Background

IND vs PAK T20 World Cup 2022 LIVE: உலகம் கிரிக்கெட் ரசிகர்கள்  மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நாள் இதோ இன்று வந்துவிட்டது. தீபாவளி என்றால் அதுதான் இல்லை. இருநாட்டு ரசிகர்களும் காத்திருந்த சரவெடியாய் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. 


கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் தலைமையிலான அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இதுவரை உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். 


தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில், மிடில் ஆர்டர் வரிசையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா  எதிரணிக்கு அச்சுறுத்தல் தருகின்றனர். பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவே என்றாலும், ஷமி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி நம்பிக்கை அளித்தார். 


புவனேஷ்வர் குமார், அஷ்வின், சாகல் ஆகியோரது அனுபவத்துடன், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் இளமை கைகொடுத்தால் இந்திய அணி நிச்சயம் இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெல்லும். 


பாகிஸ்தான் அணி மிக வலுவான அணியாகவே இருந்து வருகிறது. கேப்டன் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் சிறப்பான தொடக்கம் தந்து வருகின்றனர். அதிலும் ரிஸ்வானின் ஆட்டம் ஆபாரமானது, அபாயமானது. 


மிடில் ஆர்டர் வரிசையில் பாகிஸ்தான் அணியில் சிறிய சிக்கல் இருந்து வருகிறது. கடந்த சில தொடர்களாக யாரும் பெரிதாக நம்பிக்க அளிக்கவில்லை. 


வழக்கம்போல், பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் கெத்து என்பதை இன்றைய போட்டியில் மீண்டும் நிருபிக்கலாம். நசீம் ஷா, ஷகின் அப்ரிடி வேகம் இந்திய அணிக்கு சோகத்தை அளித்தாலும் பெரிய ஆச்சர்யம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டி இருநாட்டு ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்து படைக்கும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.