செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!

அத்திக்கடவு - அவினாசி திட்டம் அமைய உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தார். 

Continues below advertisement

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Continues below advertisement

செங்கோட்டையன்  vs  எடப்பாடி: 

கோவை அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில், கட்சி சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால், அத்திக்கடவு - அவினாசி திட்டம் அமைய உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தார். 

இதன் காரணமாக அதிமுகவில் விரிசல் ஏற்ப்பட்டு விட்டதாகவும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

செங்கோட்டையன் மறுப்பு: 

இதற்கு விளமளித்து பேசிய செங்கோட்டையன் ”அத்திக்கடவு அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படாததால் அதில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர  2011ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப்பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்களே மேடையில் இல்லை” என்றார். ஆனால் இந்த விளக்கம் பேச்சுக்கு மட்டும் தான் வந்ததாக கூறப்பட்டது.

 மாவட்ட செயலாளர்கள் பட்டியல்: 

இந்த நிலையில் தான் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஆனால் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை. இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அதிமுகவில் அமைப்பு ரீதியான 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து கழற்றிவிடப்படலாம் என்று பேசப்படுகிறது. இருப்பினும் செங்கோட்டையனுக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

 

Continues below advertisement