மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement


அமைச்சர் அன்பில் மகேஷ் மகன்:


எப்படி இந்தியை திணிக்குறாங்க? இந்தியை யார் திணிக்கிறார்கள்? 3 மொழி படிக்க வேண்டும். காரணம் உலகம் எல்லாம் படிக்குறார்கள். தமிழநாட்டின் புள்ளி விவரத்தைப் பாருங்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 52 லட்சம். தனியார் பள்ளி மாணவர்கள் 56 லட்சம். தனியார் பள்ளியில் மாணவர்கள் அதிகம் படிக்குறார்கள். குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் 30 லட்சம் மாணவர்கள் 3 மொழி படிக்குறார்கள். 


ஏன்? பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் ப்ரெஞ்ச் மொழி படிக்கிறார். இது நான் பேச வேண்டிய கட்டாயம். ப்ரெஞ்ச் மொழி படிப்பது தப்பில்லை. பிடித்த மொழியை படியுங்கள். ஆனால், உங்கள் குழந்தை பிரெஞ்ச் மொழி படிக்கனும் தனியார் பள்ளியில். ஆனால், இந்த 52 லட்சம் குழந்தைகள் தட்டுத்தடுமாறி மரத்துக்கு கீழே, வெயில்ல உடைந்துபோன கரும்பலகையை வைத்துக்கொண்டு குறைவான ஆசிரியர்கள் இருக்கும் நேரத்தில் படிக்கிறார்கள். 


52 லட்சம் மாணவர்கள்:


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கடைசி தி.மு.க. கவுன்சிலர் வரை சொல்றேன். கடைக்கோடியில் இருப்பவர்கள் வரை 3 மொழி படிக்குறாங்க. அவங்க நல்லா  படிக்கனும். வெளிநாட்டுப் போகனும். நல்லா சம்பாதிக்கனும், அரசியல்வாதியா வரனும். ஆனால், அரசுப்பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள் இவர்களுக்கு நோட்டீஸ் ஒட்டனும். 


தமிழ்நாட்டில் கல்வியை வைத்து இரண்டு தரப்பு மக்கள் உருவாகிட்டாங்க. ஒருவர் மேல மேல போயிட்டாங்க. இன்னொரு தரப்பு மனிதர் அவர்களுக்கு பணி செய்யனும். இப்படியை கை கட்டி நிக்கனும். இதெல்லாம் நாம செய்யனும். தமிழை வைத்து அரசியலிலே தஞ்சம் அடைந்து பிழைப்பு நடத்திக்  கொண்டிருக்கிறார்கள் திமுக-வினர். 


தமிழை வளர்க்கும் லட்சணமா?


2024ல் ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டில் 3ம் வகுப்பில் 87 சதவீதம் மாணவர்களுக்கு ஒரு பாராவை சரியாக படிக்கத் தெரியவில்லை. இது உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, பீகாரில் உள்ள தாய்மொழியை படிக்கச் சொன்னார்கள். உத்தரபிரதேசத்தில் 73 சதவீதம் மட்டுமே படிக்க முடியவில்லை. குஜராத்தில் 75 சதவீதமும், மகாராஷ்ட்ராவில் 63 சதவீதமும், பீகாரில் 80 சதவீதமும் படிக்க முடியவில்லை. தமிழகத்தில் 3ம் வகுப்பு மாணவர்கள் 87 சதவீதம் பேர் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கக்கூடிய தமிழ் பாராவை படிக்க இயலவில்லை. இதே பாராவை 5ம் வகுப்பு மாணவர்கள் 63 சதவீதம் பேரால் இதைப் படிக்க முடியவில்லை. 8ம் வகுப்பு மாணவர்கள் 38 சதவீதம் மாணவர்களால் இதைப் படிக்க இயலவில்லை. இதுதான் நீங்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா?


இவ்வாறு அவர் கூறினார்.