தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவை குறித்து பேசியுள்ளார். 


இந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, 


வெட்கப்படுங்கள்:


இரு மொழிக்கொள்கை தோல்வி அடைந்துவிட்டதுனு நீங்க ஒத்துக்க மாட்டீங்களா? இரு மொழிக்கொள்கையில ஜெயிச்சது திமுக காரங்க. நீங்க நல்லா ஜெயிச்சிட்டீங்க. உங்க குழந்தைங்க எல்லாம் தனியார் பள்ளியில 56 லட்சம் பேருல இருக்காங்க. ப்ரெஞ்ச், ஜெர்மன், டச்சு எல்லாம் சென்னையில படிக்குறாங்க. 


அரசுப்பள்ளியில இருக்கவங்க மேல வரக்கூடாது. கார்ல் மார்க்ஸ் எப்பவோ சொன்னது தமிழகத்தில் மாத்தி எப்படி இருக்குதுனு பாருங்க. ஒரு தலைப்பட்ட சமுதாயம் மேல்நோக்கிச் செல்லும். கல்வித்திறன் குறைவாக கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சமுதாயம் அவர்களுக்கு ஊழியம் செய்வதற்காக கீழ்நோக்கிச் செல்லும் என்பதைத் தவிர வேறு எங்கேயும் உதாரணம் இல்லை. முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும். பொய்யைச் சொல்லி பிழைப்பை நடத்தக்கூடிய முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும். 


மோடி சொன்னது என்ன?


இந்தியை கொண்டு வருகிறோம் என்று யார் சொன்னா? பிரதமர் மோடி இந்தியை கொண்டு வர மாட்டோம் என்று சொன்னவர். 2004 முதல் 2014 வரை இந்தி 3வது கட்டாய மொழி. பிரதமர் மோடி வரைவறிக்கையை மாற்றிய பிறகு இந்தி கட்டாயம் இல்லை என்றது. இதை வைத்து அரசியல் கட்சிகள் எப்படி எல்லாம் வியாபாரம் செய்கிறார்கள் என்று பாருங்கள். 


அண்ணாதுரை 1967ம் ஆண்டு அளித்த போட்டியில் தமிழகத்தில் நாங்கள் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம். எப்போது என்றால் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்கிற போது ஏற்றுக்கொள்கிறோம். கேரளாவில் 6ம் வகுப்பு முதல் 12வது வரை தமிழ் உள்ளது. மலையாளம், இந்தி உள்ளது. ஏன் கோபத்தோடு பேசுகிறேன் என்றால் அவர்கள் வாழ்க்கையை கூறு போடுகிறீர்கள். 


இவர்கள் யாருக்காவது கூலிகளாக, கொத்தடிமைகளாக நடத்த வேண்டும் என்றால் இந்த அண்ணாமலை எதிர்ப்பான். தமிழக பா.ஜ.க. எதிர்க்கும். அதில் எந்த மாற்றக்கருத்தும் வேண்டாம். 


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.