IND vs PAK LIVE Score: உள்ளே வந்த மழையால் முடிவே இல்லாமல் போன போட்டி.. கைவிடப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!
IND vs PAK Asia Cup 2023 LIVE Score: ஆசியக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இலங்கையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
267 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி களமிறங்க தயாராகிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர். இதனால், ஓவர் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை குறுக்கிட்டதால் ஓவர் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவர் எதுவும் குறைக்கப்படவில்லை.
மழை நின்று விட்டதால் போட்டியை துவங்க இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றுவரும் பல்லேகேலே சர்வதேச மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் அணி இந்திய அணியை 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 266 ரன்கள் விட்டுக்கொடுத்தது.
8 விக்கெட்டுகளை இழந்து 46வது ஓவரில் விளையாடி வரும் இந்திய அணி 251 ரன்கள் சேர்த்துள்ளது.
ஜடேஜா தனது விக்கெட்டை அஃப்ரிடி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ஆடி வந்த ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
82 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இக்கட்டான சூழலில் விளையாடி இந்திய அணியை மீட்ட இஷான் கிஷனுக்கு இந்திய அணி வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சிறப்பாக ஆடி வரும் ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வருகிறார்.
31 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்துள்ளது.
இக்கட்டான சூழலில் களமிறங்கி பொறுப்புடன் ஆடி வரும் இஷான் கிஷன் 54 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் ஹ்ர்திக் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப் 52 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளனர்.
இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பார்ட்னர்ஷின்ப் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தை ஆடி வரும் இந்திய அணி 18வது ஓவரின் முதல் பந்தில் 90 ரன்களை எட்டியுள்ளது.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்வதில் கில் தடுமாறிக்கொண்டு இருந்தார். இறுதில் அவர் 32 பந்துககளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
ஹாரிஸ் ராஃப் பந்து வீச்சில் சுப்மன் கில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வரும் இந்திய அணி 14 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்துள்ளது.
13வது ஓவரின் 5 பந்தில் இஷான் கிஷன் அடித்த பந்து ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த பீல்டரின் கைக்கு எட்டாததால் அந்த பந்து பவுண்டரியைத் தொட்டது. கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்துள்ளார் இஷான் கிஷன்.
12வது ஓவரின் 4 பந்தில் இஷான் கிஷன் சிக்ஸர் விளாசியுள்ளார். இதுதான் இந்த போட்டியின் முதல் சிக்ஸர் ஆகும்.
இரண்டாவது முறையாக குறுக்கிட்ட மழை நின்று விட்டதால் போட்டி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
11.2 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டுள்ளது. இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி இந்திய பேட்டிங்கிற்கு சவால் அளிக்கும் விதமாக பவுலிங் வீசி வருவதாலும், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்ததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக விளையாட முயற்சித்த ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டை 9 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் 9 வது ஓவரை வீசிய அஃப்ரிடி அதனை மெய்டனாக வீசியுள்ளார்.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 8 வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் சேர்த்துள்ளது.
மழையால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் ரோகித்சர்மா 12 ரன்னிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 4 ரன்னிலும் அவுட்டானது ரசிகர்களை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
மழையால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் ரோகித்சர்மா 12 ரன்னிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 4 ரன்னிலும் அவுட்டானது ரசிகர்களை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி தனது விக்கெட்டை அஃப்ரிடி பந்து வீச்சில் இன் - சைடு எஜ் முறையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
10 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் தனது முதல் ரன்னை 7வது ஓவரின் முதல் பந்தில் எடுத்துள்ளார்.
விராட் கோலி தனது ரன் கணக்கை பவுண்டரி விளாசி துவங்கியுள்ளார்.
ரோகித் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியதால் விராட் கோலி களமிறங்கியுள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 15 ரன்கள் சேர்த்துள்ளது.
ரோகித் சர்மா தனது விக்கெட்டை அஃப்ரிடி பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
மழை நின்றுள்ளதால் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.
நன்கு பெய்து வந்த கனமழை தற்போது நின்று விட்டதால், ஆடுகளத்தினை மூடிய தார்பாய்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வரும் பல்லேகேலே மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி 4.2 ஓவர்கள் வீசி வந்த நிலையில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி மீண்டும் தொடர இப்போதைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை பல்லேகேலேவில் வெளுத்து வாங்கி வருகிறது.
போட்டியில் 4.2 ஓவர்கள் வீசிய நிலையில் மழை துவங்கியுள்ளது.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்துள்ளது. 4வது ஓவரினை வீசிய நசீம் ஷா ஒரே ஒரு வைய்டு மட்டும் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர் அஃப்ரிடி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு சவாலான முறையில் பந்து வீசி வருகிறார்.
போட்டியின் மூன்றாவது ஓவரில் ரோகித் சர்மா இந்திய அணிக்கான இரண்டாவது பவுண்டரியை அடித்தார்.
2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் இரண்டாவது பந்தில் ரோகித் சர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் தவறவிட்டதால், அது போட்டியின் பவுண்டரியாக மாறியது.
பாகிஸ்தான் அணியின் அஃப்ரிடி முதல் ஓவரை வீசி வருகிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவங்கியுள்ளனர்.
இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கீதத்தை பாடி வருகின்றன.
விளையாடும் இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
விளையாடும் பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்
இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பைத் தொடரின் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
மழை தற்போது இல்லாத காரணத்தால் மைதானத்திற்குள் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.
ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் தொடங்க தாமதம் ஆகி வந்த நிலையில், மழை விட்ட நிலையில் மைதானத்திற்குள் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் கண்டி பகுதியில் மழை சற்று ஓய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி நடைபெற உள்ள கண்டி நகரில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் பாபர் அசாம் 6 ரன்கள் சேர்த்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்கள் சேர்த்த கேப்டன் என்ற கோலியின் சாதனையை முறியடிப்பார்
ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தான், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதின. அதனை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோத உள்ளன.
ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் கண்டி பகுதியில் இன்று மழை பொழிய 94% வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாளின் பிற்பகுதியில் மழை பொழிய 99 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதல் உள்ளன. கண்டியில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் தொடங்குகிறது.
Background
IND vs PAK Asia Cup 2023 LIVE Score: ஆசியக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியா Vs பாகிஸ்தான்:
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுவரைஇ இந்த இரு அணிகள் இடையேயான கிரிக்கெட் மோதல்கள் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
முதல் போட்டி - முதல் தொடர்:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி, 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான். கிரிக்கெட் உலகில் ரைவல்ரி எனப்படும் இரு அணிகளுக்கு இடையேயான மோதலில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல் அன்று தான் தொடங்கியது. இதே நாளில் தான் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியாக பாகிஸ்தான் உருவெடுத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது. மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அடுத்த இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தன. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது.
வரவேற்பும், அரசியலும்:
தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி இருந்தாலும் இருநாடுகளின் வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் எல்லை தாண்டி கொண்டாடப்படனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கையால் தான், 1987ம் ஆண்டு முதன்முறையாக இங்கிலாந்து அல்லாத நாட்டில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது.
மோதல்களும் - முடிவும்:
20 ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கு இடையே போட்டிகளின் போது பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அம்பயர்கள் சொந்த அணிக்கு சாதகமாக செயல்பட்டது, சூதாட்டம் என பல்வேறு புகார்கள் எழுந்தன. இருநாடுகளுக்கு இடையேயான நிலையற்ற உறவுகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரும் பாதிக்கப்பட்டது. 1998க்கும் 2008க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இரு அணிகளும் 14 டெஸ்ட் போட்டிகளில் மோதின. ஆனால், 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இருநாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி என்பது இதுவரை நடைபெறவில்லை. 2012/13 இல் மூன்று போட்டிகள் கொண்ட ODI மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அதுவே இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இருதரப்பு போட்டியாக உள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு:
அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி போட்டிகளிலும், ஆசிய கோப்பையிலும் மட்டுமே எதிர்த்து விளையாடி வருகின்றன. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாடுகளாக அல்லாமல் எதிரி நாடுகளாக பார்க்கப்பட்டன. நாடுகளுக்கு இடையேயான இந்த மோதலை களத்தில் வீரர்களின் ஆக்ரோஷத்தில் காண முடிந்தது. அது ரசிகர்களிடையேயும் தொற்றிக்கொள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே அது பெரும் போராக பார்க்கப்படுகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான போட்டியை இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்நோக்கி பார்க்கின்றனர். அந்த போட்டி தொடர்பான வணிகமும் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. உதாரணமாக, 2019 உலகக் கோப்பை tஹொடர் முழுவதும் 706 மில்லியன் பார்வையாளர்களை ஐசிசி பெற்றது இதில் 273 மில்லியன் பார்வயாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆதிக்கம்:
2010 முதல் 2020 வரை இரு அணிகளும் விளையாடிய 14 ஆட்டங்களில் இந்தியா 10-ல் வெற்றி பெற்றது. இருப்பினும் இதுவரை மொத்தமாக நடைபெற்ற 136 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் 73 போட்டிகளிலும், இந்தியா 55 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2013-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 17 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் 11 தொடரகளையும் இந்தியா ஐந்து தொடர்களையும் வென்றது. டி20 போட்டிகளில் 12 முறை நேருக்கு நேர் மோதியதில் ஒன்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 58 டெஸ்ட் போட்டிகளில், 38 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. அதேநேரம், பாகிஸ்தான் 11 போட்டிகளிலும், இந்தியா 9 போட்டிகளிலும் வென்றுள்ளன. இரு தரப்புக்கும் இடையே டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 4 தொடர்களை வெல்ல, ஏழு டிராவில் முடிந்துள்ளன.
சச்சின் சாதனை:
இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில், 67 இன்னிங்ஸ்களில் 2526 ரன்கள் சேர்த்து சச்சின் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் 64 இன்னிங்ஸ்களில் 2403 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் அதிகபட்சமாக வாசிம் அக்ரம் 60 விக்கெட்டுகளையும், அனில் கும்ப்ளே 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஜாவேத் மியான்தத் 2228 ரன்களையும், இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் 2089 ரன்களையும் சேர்த்துள்ளனர். அதிக விக்கெட்டுகளில் கபில்தேவ் (29), இம்ரான் கான் (23) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டி20 போட்டிகளில், விராட் கோலி 488 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -