Ind Vs NZ Score LIVE: நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

Ind Vs NZ Score LIVE: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 22 Oct 2023 10:13 PM
Ind Vs NZ Score LIVE: இந்திய அணி வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ind Vs NZ Score LIVE: கோலி அவுட்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் கோலி 95 ரன்னில் அவுட் ஆனார்.

Ind Vs NZ Score LIVE: 46 ஓவர்கள் முடிந்தது..!

46 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 82* மற்றும் ஜடேஜா 35* ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Ind Vs NZ Score LIVE: 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி!

26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: 45 ஓவர்கள் முடிந்தது..!

45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 245 ரன்களுடன் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் ஜடேஜா களத்தில் நிற்கின்றனர்.

Ind Vs NZ Score LIVE: 43 ஓவர்கள் முடிந்தது..!

43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: 40 ஓவர்கள் முடிவில்..!

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விராட் கோலி 71* ரன்களும் ஜடேஜா 17* ரனகளுடனும் களத்தில் நிற்கின்றனர்.

Ind Vs NZ Score LIVE: 39 ஓவர்கள் முடிவில்..!

39 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 222 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் நிற்கின்றனர்.

Ind Vs NZ Score LIVE: 38 ஓவர்கள் முடிவில்..!

38 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்துள்ளது.

Ind Vs NZ Score LIVE: 80 பந்துக்கு 68 ரன்கள் எடுத்தால் வெற்றி!

80 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது இந்திய அணி.

Ind Vs NZ Score LIVE: 80 பந்துக்கு 68 ரன்கள் எடுத்தால் வெற்றி!

80 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது இந்திய அணி.

Ind Vs NZ Score LIVE: 36 ஓவர்கள் முடிந்தது..200 ரன்களை இந்தியா கடந்தது..!

36 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்த இந்தியா.

Ind Vs NZ Score LIVE: அடுத்தடுத்த பவுண்டரிகள் அடிக்கும் ஜடேஜா!

தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ஜடேஜா.

Ind Vs NZ Score LIVE: 35 ஓவர்கள் முடிவில்..!

35 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்திய அணி.

Ind Vs NZ Score LIVE: நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்!

நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. அதன்படி, 313 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.

Ind Vs NZ Score LIVE: சாதனை படைத்த கோலி!

ஐசிசி 50  ஓவர் போட்டியில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. மேலும், இந்த தொடரில் 4 போட்டிகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Ind Vs NZ Score LIVE: சூர்ய குமார் யாதவ் ரன் அவுட்..!

சூர்ய குமார் யாதவ் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

Ind Vs NZ Score LIVE: அரைசதம் அடித்தார் விராட் கோலி..!

விராட் கோலி அரைசதம் அடித்தார். அதன்படி, 60 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Ind Vs NZ Score LIVE: கே.எல்.ராகுல் அவுட்..!

கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

Ind Vs NZ Score LIVE: 32 ஓவர்கள் முடிந்தது..!

32 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 182 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: நிதான ஆட்டத்தை தொடரும் இந்திய அணி

30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து ஆடி வருகிறது இந்திய அணி.

Ind Vs NZ Score LIVE: 26 ஓவர்கள் முடிவில்..!

26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி, விராட் கோலி 26* ரன்களும், கே.எல்.ராகுல் 13* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Ind Vs NZ Score LIVE: 25 ஓவர்கள் முடிந்தது..!

25 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 140 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: 23 ஓவர்கள் முடிவில்..!

23 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.

Ind Vs NZ Score LIVE: 22 ஓவர்கள் முடிந்தது..!

22 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

Ind Vs NZ Score LIVE: ஸ்ரேயாஸ் அய்யர் அவுட்..!

29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆனார்.

Ind Vs NZ Score LIVE: 20 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக விளையாடி வரும் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்,121 ரன்களை கடந்துள்ளது. அதன்படி, களத்தில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நிற்கின்றனர்.

Ind Vs NZ Score LIVE: அதிரடியாக ஆடும் இந்திய அணி..!

இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது. அதன்படி, 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

Ind Vs NZ Score LIVE: 17 ஓவர்கள் முடிந்தது...!

பனி மூட்டத்தால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 106 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: 100 ரன்களை கடந்த இந்தியா..!

இந்திய அணி 15 ஓவர்களில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: 15 ஓவர்கள் முடிந்தது..!

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: சுப்மன் கில் அவுட்..!

31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நியூசிலாந்து பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் பந்தில் அவுட் ஆனார் சுப்மன் கில்.

Ind Vs NZ Score LIVE: 12 ஓவர்கள் முடிவில்..!

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: ரோகித் அவுட்..!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Ind Vs NZ Score LIVE: பொளந்து கட்டும் ரோகித், கில் ஜோடி

8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை எடுத்துள்ளது இந்தியா.

Ind Vs NZ Score LIVE: அதிரடி காட்டும் இந்தியா

4.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 32 ரன்களை எடுத்துள்ளது. 

Ind Vs NZ Score LIVE: அதிரடி காட்டிய முகமது ஷமி..!

இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் மட்டுமே  விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Ind Vs NZ Score LIVE: 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்தது!

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி  50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்தது. 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Ind Vs NZ Score LIVE: மார்க் சாப்மேன் அவுட்

 மார்க் சாப்மேன் 8 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

Ind Vs NZ Score LIVE: 250 ரன்களை கடந்த நியூசிலாந்து அணி..!

46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: க்ளென் பிலிப்ஸ் அவுட்..!

குல்தீப் யாதவ் வீசிய பந்தில் க்ளென் பிலிப்ஸ்  விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி, 26 பந்துகளில் மொத்தம் 23 ரன்கள் எடுத்தார்.

Ind Vs NZ Score LIVE: 44 ஓவர்கள் முடிந்தது..!

42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: 42 ஓவர்கள் முடிந்தது..!

42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: சதத்தை கடந்த மிட்செல்.. நியூசிலாந்து அணி வலுவான ஆட்டம்..!

இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் மிட்செல் சதம் அடித்து விளையாடி வருகிறார். 

Ind Vs NZ Score LIVE: 4 வது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து.. 214 ரன்களுடன் வலுவான ஆட்டம்..!

37-வது ஓவரில் 205 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து நான்காவது விக்கெட்டை இழந்தது. ஏழு பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லாதம், குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். 

Ind Vs NZ Score LIVE: ரச்சின் அவுட்..!

அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா முகமது சமி வீசிய 33 ஓவர் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி அவர், 87 பந்துகளில் 75 ரன்கள் பெவிலியன் திரும்பினார்.

Ind Vs NZ Score LIVE: 32 ஓவர்கள் முடிந்தது!

32 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஆட்டக்காரர்கள் ரச்சின் 74* மற்றும் மிட்செல் 69* ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர்.

Ind Vs NZ Score LIVE: கடைசி 20 ஓவர்கள்...விக்கெட் எடுக்காத இந்தியா

கடைசி 20 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிவருகிறது. 

Ind Vs NZ Score LIVE: 150 ரன்களை கடந்த நியூசிலாந்து..!

30.1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 150 ரன்களை கடந்துள்ளது. 

Ind Vs NZ Score LIVE: 30 ஓவர்கள் முடிந்தது..!

30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Ind Vs NZ Score LIVE: ரச்சின் - மிட்செல் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க திணறும் இந்தியா..!

நியூசிலாந்து அணி வீரர்கள் ரச்சின் ரவிந்திரா மற்றும் டேரில் மிட்செல் பார்ட்னர்ஷிப் பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.


 

Ind Vs NZ Score LIVE: அரைசதம் அடித்தார் மிட்செல்..!

நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் அரைசதம் அடித்தார். 60 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட அவர் மொத்தம் 50 ரன்கள் அடித்தார்.

Ind Vs NZ Score LIVE: 26 ஓவர்கள் முடிவில்..!

25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி, ரச்சின் ரவீந்திரா 58* ரன்களும், டேரில் மிட்செல் 48* ரன்களும் எடுத்துள்ளனர்.

Ind Vs NZ Score LIVE: விக்கெட் எடுக்க திணறும் இந்தியா..!

3 வது விக்கெட்டை எடுப்பதற்கு இந்திய அணி திணறி வருகிறது. முன்னதாக 8 வது ஓவரில் 2 வது விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Ind Vs NZ Score LIVE: ரச்சின் ரவீந்திரா அரைசதம்...!

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார். அதன்படி, 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்துள்ளார்.

Ind Vs NZ Score LIVE: 22 ஓவர்கள் முடிந்தது...!

22 ஓவர்கள் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணி 107 ரன்களுடன் விளையாடி வருகிறது. மேலும், அரைசதம் அடிக்கும் முனைப்பில் ரச்சின் ரவீந்திரா களத்தில் நிற்கிறார்.

Ind Vs NZ Score LIVE: 100 ரன்களை கடந்தது நியூசிலாந்து...!

21 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை கடந்துள்ளது நியூசிலாந்து.

Ind Vs NZ Score LIVE: 20 ஓவர்கள் முடிவில்...!

நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி, களத்தில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் நிற்கின்றனர்.

Ind Vs NZ Score LIVE: 18 ஓவர்கள் முடிந்தது...!

2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் 74 ரன்கள் எடுத்துள்ளது.

ரவீந்திர ஜடேஜாவால் மீண்டும் தப்பிய ரவீந்திரா

11 ஓவரின் 5வது பந்தை ஷமி வீசினார். அப்போது ரவீந்திரா அந்த பந்தை அடித்தார். அந்த பந்து ரவீந்திர ஜடேஜாவின் கைக்கே சென்றது. ஆனால் எதிர்ப்பாராதவிதமாக ஜடேஜா அந்த கேட்ச்சை தவறவிட்டார்.  

மயிரிழையில் தப்பிய ரவீந்திரா

11 வது ஓவரை இந்திய பவுலர் ஷமி வீசினார். அதில் 2 வது பாலை ரவீந்திரா எதிர்கொண்டார். அப்போது ஷமி வீசிய பந்து ரவீந்திராவின் பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றதுபோன்று தெரிந்தது. இதையடுத்து நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் நியூசிலாந்து ரிவீவ் சென்றது. அதில் மூன்றாவது நடுவர் பேட்டில் பந்து படவில்லை என்பதை உறுதி செய்தார். இதனால் மயிரிழையில் ரவீந்திரா தப்பினார். 

10 ஓவர்களின் முடிவில்

10 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரவிந்திராவும் மிட்செல்லும் உள்ளனர். 

9 ஓவர் முடிவில் நியூசிலாந்து

9 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

வில் யங் அவுட்

8.1 ஆவது ஓவரில் இந்திய பவுலர் ஷமி வீசிய பந்தை நியூசிலாந்து வீரர் வில் யங் அடிக்க முயன்றார். அந்த பந்து வில் யங் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்பில் பட்டது. இதனால் வில் யங் அவுட்டானார். 

Ind Vs NZ Score LIVE: கணக்கை தொடங்காமல் வெளியேறிய கான்வே..!

சிராஜ் வீசிய 3 ஓவரின் 3வது பந்தில் நியூசிலாந்து வீரர் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

Ind Vs NZ Score LIVE: நியூசிலாந்து 2 ஓவர்களில் 5 ரன்கள்..!

முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் கொடுத்தார். 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து யங் விளையாடி வருகிறார். 2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்தது. 

Ind Vs NZ Score LIVE: முதல் ஓவரை மெய்டனாக வீசிய பும்ரா..!

ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசி முதல் ஓவரை மெய்டனாக வீசினார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.

நியூசிலாந்து அணி பிளேயிங் லெவன்

டெவோன் கான்வே,வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ். மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்

இந்திய அணியில் மாற்றம் - ஷமி, சூர்யகுமார் யாதவ் இன்

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

இந்திய அணி பந்துவீச்சு

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

இந்திய ரசிகர்களின் 20 வருட ஏக்கம்..

2003ம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய, எந்தவொரு போட்டியிலும் இந்திய அணி வென்றதே இல்லை. இந்த மோசமான பயணத்திற்கு இன்றைய போட்டியின் மூலம், இந்திய அணி முடிவு கட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

முதல் தோல்வி யாருக்கு?

நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியையே சந்திக்காமல் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை ஆகிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியின் மூலம் இரண்டில் ஏதேனும் ஒரு அணி நடப்பு உலகக் கோப்பையில் முதல் தோல்வியை பதிவு செய்ய உள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து மோதல்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Background

Ind Vs NZ World Cup 2023: தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  21வது லீக் போட்டியில், இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது.


உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 20 லீக்  போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.


அதில் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


தென்னாப்ரிக்கா - இங்கிலாந்து மோதல்:


இமாச்சலபிரதேச மாநிலம்  தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


இதுவரை விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்று உலகக் கோப்பையின் மிகவும் வலுவான அணிகளாக திகழ்கின்றன. இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதை உறுதி செய்ய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


பலம் & பலவீனங்கள்:


இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே நடப்பு உலகக் கோப்பையில், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவிக்க, நட்சத்திர பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை குவிப்பதன் மூலம் இவர்களின் வெற்றிப் பயணம் தொடர்ந்து சாத்தியப்பட்டு வருகிறது.


இதனால், நடப்பு உலகக் கோப்பையில் தங்களில் யார் சிறந்த அணி என்பதை நிரூபிக்கவே, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மல்லுக்கட்ட உள்ளன. அதேநேரம், உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது இந்திய அணிக்கு சற்று கூடுதல் பலமாக கருதப்பட்டாலும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயமடைந்து இருப்பது சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது. 


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 116 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.  அதில் இந்தியா 58 முறையும், நியூசிலாந்து 50 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிய, ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதோடு, அண்மைக் காலமாக ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மைதானம் எப்படி?


தர்மசாலா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், நேரம் செல்ல செல்ல இது பந்துவீச்சிற்கு சாதகமாக மாறக்கூடும். இதனால், பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


நியூசிலாந்து:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.