IND vs NZ, T20 WC LIVE:நியூசிலாந்து அபார வெற்றி: நெருக்கடியே அளிக்காமல் இந்தியா தோல்வி
T20 WC 2021, Match 28, IND vs NZ: உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் முக்கியமான ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. அப்டேட்களை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 33 ரன்களுடனும், கான்வே 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்திய டேரில் மிட்செல் 35 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதன்முறையாக இந்த போட்டியில் பந்துவீசினார். அவர் ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதியில் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிராக 111 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் நியூசிலாந்து அணி 8.3 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 66 ரன்களை எடுத்து வலுவாக உள்ளது.
நியூசிலாந்து அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 44 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
111 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் நியூசிலாந்து அணி 24 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மார்டின் கப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
111 ரன்கள் என்ற சொற்ப ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள இந்தியா, நியூசிலாந்திற்கு எதிராக வருண் சக்கரவர்த்தி மூலம் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளனர்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் போராடி 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 19 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களை எடுத்தனர்.
ஹர்திக் பாண்ட்யா நீண்ட நேரமாக களத்தில் நின்று 23 பந்தில் 1 பவுண்டரியுடன் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த ஓரிரு பந்தில் ஷர்துல் தாக்கூரும் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 73 பந்துகளுக்கு பிறகு 17வது ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 6வது ஓவரில் இருந்து 15வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சியாக 19 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரிஷப்பண்ட் மிலென் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
இந்திய அணி விளையாடியுள்ள 14 ஓவர்களில் 41 பந்துகள் டாட் பந்துகளாக வீசப்பட்டுள்ளது. இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஆகும்.
இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கையான கேப்டன் விராட் கோலி 17 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ட்ரெண்ட் போல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
முதல் பந்திலே அதிர்ஷ்டவசமாக வாழ்வு பெற்ற துணைகேப்டன் ரோகித்சர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சோதி பந்துவீச்சில் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 16 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், இந்திய அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்திய அணிக்காக இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய இந்திய துணைகேப்டன் முதல் பந்திலே அளித்த எளிதான கேட்ச் வாய்ப்பை நியூசிலாந்து வீரர் கோட்டைவிட்டார்.
இந்திய அணிக்காக அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான்கிஷான் அதிரடியாக ஆட முயற்சித்து 8 பந்தில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து ட்ரென்ட் போல்ட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் அதிரடி மாற்றமாக தொடக்க வீரர்களாக இஷான்கிஷானும், கே.எல்.ராகுலும் களமிறங்கியுள்ளனர். ரோகித்சர்மா நீண்ட காலத்திற்கு பிறகு தொடக்க வீரராக களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இஷான்கிஷானும், புவனேஷ்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
துபாயில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதும் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Background
உலகோப்பை டி20 ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று முக்கியமான ஆட்டத்தில் விளையாடுகின்றன. டி20 உலககோப்பை உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்தை இந்தியா முதன்முறையாக வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -