IND vs NZ 3rd T20 LIVE:நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டி - இந்திய அணி வெற்றி
IND vs NZ 3rd T20 LIVE Updates: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. 235 ரன்களை இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி ஆடி வருகிறது
இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 53 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்
இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்தது. 235 ரன்களை இலக்காக கொண்டு அந்த அணி ஆடி வரும் நிலையில் 21 ரன்க மட்டுமே எடுத்துள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் - 235 ரன்களை இலக்காக கொண்டு அந்த அணி ஆடி வருகிறது.
நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷ்தீப் சிங் பாலில் அவுட் ஆனார். 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
ஃபின் ஆலன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் அவுட் ஆனார். கான்வே ஹர்ஷ்தீப் சிங் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
நியூசிலாந்து அணி 1.4 ஓவர் முடிவில் 4 ரன்னுகு இரண்டு விக்கெட் எடுத்து விளாயாடி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் அந்த அணி வெற்றி பெற இந்திய அணி 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிரடி ஆடிய சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி சுப்மன் கில் 54 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் சதமடித்து அசத்தல் - 17 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 14 ஓவர்களில் 144 ரன்கள் விளாசியுள்ளது. சுப்மன் கில் 61 ரன்களுடன் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் 36 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 9.4 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ராகுல் திரிபாதி அவுட்டானார் - 44 ரன்களில் அவர் வெளியேறி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில் - ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் - 7 ஓவர்களில் இந்திய அணி 69 ரன்கள் குவிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் அதிரடி ஆட்டம் - 5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 17 பந்துகளில் 32 ரன்கள் விளாசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் 1 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்
Background
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இப்போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றபோது தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த டி20 தொடர் பொறுத்தவரை ரசிகர்களுக்கு பெரியளவில் விருந்தாக அமையவில்லை என்றே கூறலாம். குறிப்பாக, கடந்த டி20 போட்டியில் 101 ரன்கள் இலக்கை இந்திய அணி 1 பந்து மீதம் வைத்து எட்டியபோது ரசிகர்கள் மிகுந்த வெறுப்பாகினர் என்பதே உண்மை. இதனால், இந்த போட்டியில் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த சில டி20 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷான் இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். சுப்மன்கில் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பலமாகும். ராகுல் திரிபாதி சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் வெற்றி பெற வைத்த சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.
இந்திய அணியில் உம்ரான்மாலிக், ஷிவம்மாவி, அர்ஷ்தீப்சிங் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். நியூசிலாந்தில் சான்ட்னர், ப்ராஸ்வெல், பெர்குசன், டிக்னெர், சோதி இந்திய அணிக்கு பந்துவீச்சில் குடைச்சல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணி 2023ம் ஆண்டை இனிதாக தொடங்கியிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குவார்கள். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை வென்று வெற்றியுடன் நாடு திரும்ப நியூசிலாந்து அணியும் ஆவலுடன் களமிறங்கும். கடந்த போட்டியில் ஆடுகளம் மிகவும் சொதப்பலாக இருந்ததால், இந்த போட்டியில் ஆடுகளம் நன்றாக அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -