IND vs NZ, 2nd T20 Live: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி! ரசிகர்கள் உற்சாகம்!
IND vs NZ, 2nd T20, Ekana Sports City Stadium: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
19.5 பந்தில் ஃபோர் அடித்தார் சூர்யகுமார் யாதவ். 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.
2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி, எதிர்கொள்ளும் சூர்யகுமார்
4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி...எதிர்கொள்ளும் ஹர்திக்
4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி...எதிர்கொள்ளும் சூரியகுமார் யாதவ்
5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி...எதிர்கொள்ளும் சூரியகுமார் யாதவ்
6 பந்துகளில் 6 ரன்கள் தேவை...எதிர்கொள்ளும் பாண்டியா
ஃபோர் அடித்தார் ஹர்திக் பாண்டியா. 7 பந்துகளில் 7 ரன்கள் அடித்தால் இந்திய அணி வெற்றி
இந்திய அணி 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது
இந்திய அணி 16.1 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
4வது விக்கெட்டாக வாசிங்டன் சுந்தர் ரன் அவுட், களமிறங்கியுள்ள ஹர்த்திக்
இந்திய அணி 14 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்துள்ளது
சூர்யகுமார் யாதவ் இஷ் சோதி பந்துவீச்சில் இரண்டு ரன்கள் எடுத்தார். 13 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் இஷ் சோதி பந்துவீச்சில் இரண்டு ரன்கள் எடுத்தார். 12.1 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள்
இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் எடுத்துள்ளது.
மிட்செல் சான்ட்னரின் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் எடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 49 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி பேட்டிங் 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது
இசான் கிசான் ரன் அவுட் மூலம் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
8 ஓவர்கள் முடிவுற்ற நிலையில், ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 43 ரன்கள் எடுத்துள்ளது
6.1 ஓவர்கள் முடிவுற்ற நிலயில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 30 ரன்கள் எடுத்துள்ளது.
பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 5. 1ஓவர் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு நியூசிலாந்து அணி 99 ரன்கள் குவித்து, 100 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் லாக்கி ஃபெர்குசன் டக் அவுட் ஆனார். 18 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணி களத்தில் உள்ளது.
16.5 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வால் பவுண்டரிக்கு விரட்டிய பந்தை அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடித்து அசத்தினார். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 17.4 ஓவர்களில் இஷ் தீப் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை நியூசிலாந்து அணி குவித்துள்ளது.
12.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேனை தீபக் ஹீடா பந்தில் குல்தீப் யாதவ் அட்டகாசமான ரன் அவுட் செய்தார்.
5 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 62 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அடுத்ததாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் களமிறங்கியுள்ளார்.
9.6 ஓவர்கள் முடிவில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் டாரில் மிட்செல் 8 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
6.5 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் க்ளென் ப்லிப்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
நியூசிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்களைக் குவித்துள்ளது.
4.4 ஓவர்களில் டெவான் கான்வே வாஷிடன் சுந்தரின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
3.2 ஓவர்கள் முடிவில் யஸ்வேந்திர சாஹல் பந்தில் க்ளீன் போல்டாகி 11 ரன்களுடன் ஃபின் ஆலன் வெளியேறினார்.
மூன்றாவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 21 ரன்களைக் குவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் முதல் ஓவரில் ஃபின் ஆலன் எந்த ரன்களையும் குவிக்காத நிலையில், நியூசிலாந்து அணி 6 ரன்களைக் குவித்துள்ளது.
இன்றைய இரண்டாவது டி20 போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி 7 மணிக்குத் தொடங்கும் நிலையில் இரு அணி கேப்டன்களான ஹர்திக் பாண்டியா, மிட்செல் சாண்ட்னர் இருவரும் இன்னும் சிறிது நேரத்தில் டாஸ் போடுவதற்காக வர உள்ளனர்.
முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மற்றொருபுறம், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான யஸ்வேந்திர சாஹல் முந்தைய போட்டியில் விளையாடாத நிலையில் இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் எகானா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டி நேரலை ஒளிபரப்பாக உள்ளது.
Background
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும்.
ராஞ்சியில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். கடைசி ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 27 ரன்களை விட்டுகொடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 176 ரன்கள் குவித்தது. இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரே ஓவரில் 16 ரன்களை விட்டுகொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இஷான் - ஹூடாவின் தொடர் சொதப்பல்:
இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றன. இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் மற்றும் தீபக் ஹூடா கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க திணறி வருகின்றன. வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த ஏழு இன்னிங்ஸ்களாக 37, 2, 1, 5, 8, 17 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இஷான் கிஷன் கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் அரைசதத்தை அடித்தார்.
அதேபோல், அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு டி20யில் சதமடித்த தீபக் ஹூடா, கடந்த 13 இன்னிங்ஸில் 17.88 சராசரியை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 10 பந்துகளை சந்தித்த ஹூடா 10 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில், இவ்வீரர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் பிரித்வி ஷா களமிறங்கலாம். இது நடந்தால், பிரித்வி ஷா ஓபனிங்கும், ஜித்தேஷ் சர்மா மிடில் ஆர்டரும் விளையாடுவார்கள்.
நம்பிக்கை அளித்த சூர்யா- சுந்தர்:
கடந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 எடுத்து நம்பிக்கை அளித்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் சுந்தர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இந்தநிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் நியூசிலாந்து அணி விரும்புகிறது. டேவான் கான்வே மற்றும் மிட்செல் ஆகியோர் சிறப்பான பார்மில் இருந்து வருவது இந்திய அணிக்கு பின்னடைவே!
இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், பிரித்வி ஷா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுசுவேந்திர யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.
நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், டேன் கிளீவர் (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், மைக்கேல் ரிப்பன், லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேர் டிக் ஜேக்கப் டஃபி, ஹென்றி ஷிப்லி மற்றும் பென் லிஸ்டர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -