IND vs NZ 1st Test LIVE Day 2 : விக்கெட் இழப்பின்றி 100-ஐ தாண்டிய நியூசிலாந்து

இந்தியா- நியூசிலாந்து டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 26 Nov 2021 03:34 PM
விக்கெட் இழப்பின்றி 100-ஐ தாண்டிய நியூசிலாந்து

இரண்டவாது நாளின் கடைசி செஷனிலும் நிதானமாக விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை தாண்டி இருக்கிறது. ஓப்பனர்கள் லாதம் (40*) மற்றும் யங் (66*) களத்தில் உள்ளனர்.

தேநீர் இடைவேளை வரை நியூசிலாந்து 72/0

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளை விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து நிதான தொடக்கம்

இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் சற்று முன் வரை 18 ஓவர்கள் வரை 38 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 11 ரன்களுடனும், வில்யங் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 111 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

அசத்தல் சதமடித்த ஸ்ரேயாஸ் அவுட்...! 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா..!

இந்திய அணிக்காக தனது அறிமுகப்போட்டியிலே அசத்தலான சதமடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் டிம் சவுதி பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்திற்கு எதிராக 300 ரன்களை கடந்த இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 300 ரன்களை கடந்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 104 ரன்களுடனும், அஸ்வின்12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Background

கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றும் வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்திருந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்த அசத்தினார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.