IND vs NZ 1st Test LIVE: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு 17வது அரை சதம் ; முதல் நாளில் 250-ஐ தாண்டிய இந்திய அணி

இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் உடனுக்குடன் அப்டேட்களை கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 25 Nov 2021 04:29 PM
ரஹானேவும் போல்ட்...! 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா..!

நியூசிலாந்திற்கு எதிராக முதல் இன்னிங்சில் பேட் செய்து வரும் இந்திய அணி ஜேமிசன் பந்தில் தடுமாறி வருகிறது. கேப்டன் ரஹானே 63 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 35 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.  

மூன்றாவது விக்கெட்டை இழந்த இந்தியா : புஜாரா அவுட்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா டிம் சவுதி பந்தில் விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 88 பந்தில் 2 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

100 ரன்களை கடந்த இந்தியா : புஜாரா - ரஹானே நிதானம்...!

நியூசிலாந்திற்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆடி வரும் இந்திய அணி 36வது ஓவரில் 100 ரன்களை கடந்து ஆடி வருகிறது. 

ஜேமிசனிடம் ஸ்டம்பபை பறிகொடுத்த சுப்மன்கில்...!

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 52 ரன்கள் எடுத்த நிலையில், ஜேமிசன் பந்தில் போல்டாகி வெளியேறினார். 

நியூசிலாந்திற்கு எதிராக சுப்மன்கில் அரைசதம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார்.

தொடரும் நிதான ஆட்டம் :50 ரன்களை கடந்த இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி 50 ரன்களை கடந்துள்ளது. சுப்மன் கில்  33 ரன்களுடனும், புஜாரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி நிதான ஆட்டம் : 10 ஓவர்களில் 24-1

இந்தியாவின் இன்னிங்சை தொடங்கிய மயங்க் அகர்வாலும், சுப்மன்கில்லும் மிகவும் நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 21 ரன்னாக இருந்தபோது, தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 13 ரன்களில் வெளியேறினார். அவர் 28 பந்தில் 2 பவுண்டரிகள் அடித்திருந்தார். சற்றுமுன்வரை இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது புஜாராவும், சுப்மன் கில்லும் களத்தில் உள்ளனர்.

ஆட்டத்தை தொடங்கிய மயங்க் அகர்வால்-சுப்மன் கில் ஜோடி...!

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சை இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் தொடங்கியுள்ளனர். 

இந்திய கேப்டன் ரஹானே டாஸ் வென்ற வீடியோ உள்ளே...!

இந்திய கேப்டன் ரஹானே டாஸ் வென்ற வீடியோ






இன்னும் சற்று நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை தொடங்க உள்ளனர்

இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ்...!

இந்திய அணியில் சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், சஹா, ஜடேஜா, அக்‌ஷர் படேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.


நியூசிலாந்து அணியில் டாம்லாதம், வில்லியம்சன், டெய்லர், ஹென்றி நிகோலஸ், டாம் ப்ளண்டெல், ரச்சின் ரவீந்திரா, டிம் சவுதி, அஜாஸ் படேல், ஜேமிசன், வில்லியம் சோமர்வில்லே களமிறங்கியுள்ளனர்.


இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கியுள்ளார்.

Background

கான்பூரில் இன்று தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.