IND vs NZ 1st ODI LIVE Blog: வெற்றியை தன்வசமாக்கிய நியூசிலாந்து..! டாம் லதாம், வில்லியம்சன் அசத்தல்..!
IND vs NZ 1st ODI LIVE: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூலாந்து அணிக்கு 307 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 307 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றிபெற்றது.
தாக்குர் வீசிய 40 ஓவரில் டாம் லாதம் ஒரு சிக்ஸர், 4 ஃபோர் பறக்கவிட்டு சதம் அடித்துள்ளார்
இந்திய அணியின் பவுலிங்கை நாலாபுறமும் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டி வருகிறது வில்லியம்சன் டாம் லாதம் கூட்டணி.
இன்னும் 12 ஓவர்களில் 100 ரன்கள் தேவையாக உள்ளது.
நியூசிலாந்து அணி 37 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்து மிகவும் வழுவான நிலையில் உள்ளது.
35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 187 - 3 என்ற வழுவான நிலையில் உள்ளது. வில்லியம்சன் 68 ரன்களுடனும், லாதம் 55 ரன்களுடனும் களத்தில் நிலையாக உள்ளனர்.
30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 55 பந்தில் 4 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் என 51 ரன்கள் குவித்துள்ளார்.
25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி 22 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் லதாம் உள்ளனர்.
போட்டியின் 20வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக் நியூசிலாந்து அணியின் மிட்செல்லை அவுட்டாக்கினார். நியூசிலாந்து அணி தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் விளாசியுள்ளது.
12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்துள்ளது.
நிதானமாக ஆடி வரும் நியூசிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 4 ரன்களுடனும், கான்வே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் விக்கெட் விழுந்த பிறகு கேன் வில்லியம்சன் களமிறங்கியுள்ளார்.
8 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
307 ரன்கள் இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கான்வே மற்றும் ஆல்லென் களம் இறங்கியுள்ளனர். இந்திய அணியின் அர்ஷதீப் சிங் முதல் ஓவரை வீசுகிறார்.
கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 306 ரன்கள் எடுத்து 307 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த ஸ்ரேயஸ் ஐயர் அவுட் ஆகியுள்ளார்.
அதிரடியாக ஆடிவந்த ஸ்ரேயஸ் ஐயர் அவுட் ஆகியுள்ளார்.
இந்திய அணி தடுமாறிக் கொண்டு இருந்த போது கை கோர்த்த ஸ்ரேயஸ் சஞ்சு சாம்சன் பார்ட்னர்ஷிப் போட்டியின் 46வது ஓவரில் பிரிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன் 38 பந்தில் 36 ரன்கள் அடித்து சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
56 பந்துகளைச் சந்தித்த ஸ்ரேயஸ் ஐயர் 3 சிக்ஸர் ஒரு பவுண்ட்ரி உட்பட 50 ரன்கள் விளாசியுள்ளார்.
40 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிறகு 210 ரன்கள் குவித்து, சரிவில் இருந்து மீண்டுள்ளது இந்திய அணி.
போட்டியின் 33வது ஓவரில் ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் என இருவரும் அடுத்தடுத்து பெர்குஷன் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர்.
அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 23 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
30 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அடுத்தடுத்த ஓவரில் நியூசிலாந்து அணி தட்டித் தூக்கியுள்ளது. ஷிகர் தவான் 77 பந்தில் 72 ரன்கள் குவித்துள்ளார். இவர் 13 பவுண்ட்ரிகள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் சுப்மன் கில் 65 பந்தில் அரைசதம் அடித்த நிலையில் பெர்குஷன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவர் ஒரு பவுண்ட்ரி, மூன்று சிக்ஸர் விளாசியிருந்தார்.
இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க நியூசிலாந்து அணி திணறி வருகிறது.
நிதானமாக ஆடி வந்த ஷிகர் தவான் தேனீர் இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 53 ரன்கள் விளாசியுள்ளார். இதில் இவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 9 பவுண்ட்ரிகள் விளாசியுள்ளார்.
இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது 18 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 68 ரன்கள் எடுத்து நிதானமாகவே விளையாடி வருகிறது. இந்திய அணியின் தற்போதைய ரன்ரேட் 4.53ஆக உள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஜோடி ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் 12.2ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது. இதில் தவான் 40 பந்துகளில் 4 ஃபோர்கள் உட்பட 22 ரன்களும், சுப்மன் கில் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் ஒரு ஃபோர் உட்பட 27 ரன்களும் எடுத்துள்ளனர்.
நிதானமாக ஆடி வரும் இந்திய அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்களின் முடிவில் தவான் 26 பந்துகளில் 16 ரன்களும் சுப்மன் கில் 16 பந்துகளில் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
6வது ஓவர் முடிவில் சுப்மன் கில் ஆட்டத்தின் முதல் சிக்ஸை பறக்கவிட்டார்
களம் இறங்கிய இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய அணி 5 ஓவர்களின் முடிவில் 16 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் ஷிகர் தவானும் சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்தியாவின் சார்பில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கியுள்ளனர். ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்ட்ரிக்கு விரட்டி கேப்டன் ஷிகர் தவான் அதகளம் செய்துள்ளார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் லாதம்(விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்
இந்தியா ஆடும் லெவன்
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
Background
உலககோப்பை டி20 தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டி20 முகத்தை மாற்ற பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் புதிய டி20 அணியும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இந்திய அணி, அங்கு நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த தொடருக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த ஹர்திக் பாண்ட்யா டி20 கேப்டன்சியில் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் தொடர்ந்து முதல் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி என விளையாட திட்டமிடப்பட்டது. இதில் டி20 தொடர் ஹர்திக் பாண்டியா தலைமையிலும், ஒருநாள் போட்டித் தொடர் ஷிகர் தவான் தலைமையிலும் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் என பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே டி20 போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி ஆசத்தியது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாண்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தனர்.
இருவரும் அரைசதம் அடித்த நிலையில் அணியின் ஸ்கோர் 124 ரன்களாக இருந்த போது, சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். அதனை அடுத்து ஷிகர் தவானும் அவுட் ஆக இந்திய அணி 124 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது.
அதன் பின்னர் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் அடுத்தடுத்து பெர்குஷன் பந்து வீச்சில் அவுட் ஆக, இந்திய அணி மேலும் தடுமாறி வந்தது. அதன் பின்னர், சஞ்சு சாம்சன் ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து அணியை வலுவாக்கி வந்தனர். அதன் பின்னர் இந்த கூட்டணியும் பிரிய, நிலைத்து ஆடி வந்த ஸ்ரேயஸ் 75 பந்தில் 4 ஃபோர், 4 சிக்ஸர் உட்பட 80 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்து 307 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் அடித்தனர். இறுதியாக வாஷிங்டன் சுந்தரும் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடிகாட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவியாக இருந்தது. 307 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -