IND vs NZ 1st ODI Score Live: சதம் விளாசிய நியூசிலாந்தின் பிரேஸ்வெல்... இந்திய அணியின் வெற்றி கனவு கலைகிறதா?

IND vs NZ 1st ODI: இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 18 Jan 2023 09:57 PM
IND vs NZ 1st ODI Score Live: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி போராடி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி - முதலில் ஆடிய இந்திய அணி 348/8 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 337 ரன்களில் ஆல் -அவுட்டானது. 

IND vs NZ 1st ODI Score Live: சதம் விளாசிய நியூசிலாந்தின் பிரேஸ்வெல்... இந்திய அணியின் வெற்றி கனவு கலைகிறதா?

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி  வீரர் பிரேஸ்வெல் சதமடித்து அபார ஆட்டம் - 7வது வீரராக களமிறங்கி சதமடித்துள்ளார். 

IND vs NZ 1st ODI Score Live: தோல்வியை தவிர்க்க போராடும் நியூசிலாந்து அணி ..!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராட்டம் - 90 பந்துகளில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. 

IND vs NZ 1st ODI Score Live: தோல்வியை நோக்கி நியூசிலாந்து அணி - இந்திய வீரர்கள் அபாரம்..!

இந்திய எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி  5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் - 28 ஓவர்களில் அந்த அணி 130 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs NZ 1st ODI Score Live: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து அணி..!

இந்திய எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறல் - 21 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

IND vs NZ 1st ODI Score Live: 2வது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி - விட்டுக்கொடுக்காத இந்திய வீரர்கள்

இந்திய எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 70 ரன்னுக்கு தனது 2வது விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க வீரர் ஃபின் அலென் 40 ரன்களில் அவுட்டானார். 

IND vs NZ 1st ODI Score Live: முதல் விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து அணி..!

இந்திய எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 7 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs NZ 1st ODI Score Live: மிரட்டிய இந்திய அணி - நியூசிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்கு நிர்ணயம்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்கள் குவிப்பு - அதிகப்பட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

IND vs NZ 1st ODI Score Live: ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் - இந்திய வீரர் சுப்மன் கில் அசத்தல்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் இரட்டை சதமடித்தார். 146 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் விளாசினார். 

IND vs NZ 1st ODI Score Live: 300 ரன்களை கடந்த இந்திய அணி - இரட்டை சதத்தை நோக்கி சுப்மன் கில்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. சுப்மன் கில் 170 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வருகிறார். 

IND vs NZ 1st ODI Score Live: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 150 ரன்களை கடந்த சுப்மன் கில்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் 150 ரன்களை கடந்து அசத்தல் 

IND vs NZ 1st ODI Score Live: 5வது விக்கெட்டை இழந்த இந்திய அணி - 300 ரன்களை தாண்டுமா?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs NZ 1st ODI Score Live: இந்திய அணி அதிரடி ஆட்டம் - விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் நியூசிலாந்து திணறல்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி  38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 129 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இவர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறி வருகிறது.

IND vs NZ 1st ODI Score Live: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - சதமடித்து அசத்திய சுப்மன் கில்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்  சுப்மன் கில்  சதமடித்து அசத்தல் - 87 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் அவர் சதத்தை எட்டினார். 

IND vs NZ 1st ODI Score Live: 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த சூர்யகுமார் யாதவ்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் ஸ்கோர் 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எட்டியுள்ளது. சுப்மன் கில் 93 ரன்களுடன் விளையாடி வருகிறார். 

IND vs NZ 1st ODI Score Live: 25 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி நிதான ஆட்டம்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டம் - 25 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs NZ 1st ODI Score Live: 8 ரன்களில் காலியான கோலி.. 2வது விக்கெட்டை இழந்த இந்தியா..!

10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த கோலி, சாண்டனர் வீசிய 16 வது ஓவரில் க்ளீன் போல்டானார். 

ஆட்டத்தை தொடங்கிய ரோகித் - சுப்மன்கில்..! அதிரடியை பார்க்கலமா..?

இந்திய அணியின் பேட்டிங்கை கேப்டன் ரோகித்சர்மா - சுப்மன்கில் தொடங்கியுள்ளனர். 

டாஸ் வென்ற ரோகித்சர்மா..! இந்தியா முதலில் பேட்டிங்..!

நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Background

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி உலக சாதனை படைத்தது. மேலும் அந்த தொடரை 3-0 என கைப்பற்றி நம்பிக்கையுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 


இந்திய நிலவரம்:


விராட் கோலி தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி காத்திருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இதேபோன்று, இந்திய பந்துவீச்சாளர்கள் சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரும் எதிரணியினரை திணறடித்து வருகின்றனர். சொந்த மண்ணில் விளையாடி வரும் கூடுதல் பலத்துடன், இந்திய அணி, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் மற்றும் ஸ்ட்ரேயாஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர், மிடில் ஆர்டரில் இந்திய அணிக்காக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


நியூசிலாந்து நிலவரம்:


நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதே உத்வேகத்துடன் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாட உள்ளது. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் இந்திய அணிக்கு நெருக்கடி தரக்கூடியவர்களாக உள்ளனர்.


நேருக்கு நேர்


இந்தியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 113 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 55 போட்டிகளிலும், நியூசிலாந்து 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. 7 ஆட்டங்களில் முடிவு இல்லை. இந்நிலையில், இன்றைய போட்டி  இந்திய நேரப்ப்டி பிற்பகல் 1.30 மணிக்கு ஐதாராபாத்தில் தொடங்க உள்ளது.

உத்தேச இந்திய அணி:


ரோகித் சர்மா, சுப்மன் கில், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்/சாஹல்,  ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக்


உத்தேச நியூசிலாந்து அணி:


பில் ஆலன்,  கான்வே, சாப்மன்/நிகோலஸ், மிட்செல், டாம் லாதம், பிளிப்ஸ்,  பிரேஸ்வெல், சாண்ட்னர், ஷ்ப்லே, டஃப் பிரேஸ்வெல், டஃபி, ஃபெர்கூசன்


இந்தியா அணி நம்.1 ஆக என்ன செய்ய வேண்டும்..? 


ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி 267 ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று தொடங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் இந்திய அணி முதலிடத்திற்கு செல்லும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.