IND vs ENG Semi Final LIVE Score: இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
IND vs ENG T20 World Cup 2024 Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் அரையிறுதி போட்டியின் நேரலையை இங்கே பார்ப்போம்
இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் 11 ரன்னில் அவுட்.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த ஹாரி ப்ரூக் 25 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி வீரர் சாம் கரண் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
அக்ஸர் படேல் வீசிய பந்தில் டக் அவுட் ஆனார் ஜானி பயர்ஸ்டவ்.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிலிப் சால்ட் 5 ரன்களில் அவுட்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடிவந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் அவுட்.
2 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவர் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் நிற்கின்றனர்.
172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்க்யு 159 ரன்கள் எடுத்துள்ளது.
ஷிவம் துபே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாசிய ஹர்திக் பாண்டியா 23 ரன்களில் அவுட்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடிவந்த சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 57 ரன்களில் விக்கெட்டானார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.
போட்டியின் இடையே மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
ரிஷப் பண்ட் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார்.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் நிற்கின்றனர்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கியுள்ளனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டியில் மழை குறிக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Background
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கயானாவில் இரவு 8 மணி நடைபெறுகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முதல் முறையாக களம் இறங்குகின்றன.
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி:
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.
சூப்பர் 8 வரை கலக்கிய இந்திய அணி:
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. குழு லீக் போட்டிகளில் முதலில் இந்திய அணி, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்தியது. கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சூப்பர் 8க்கு தகுதிபெற்ற ரோஹித் படை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் சூப்பர் 8ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்து அணியும் இதுவரை 23 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து - இந்தியா 4 முறை மோதியுள்ளன. அதில், இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணி:
பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -