IND vs AUS 3rd T20 LIVE: ஆஸியை வீழ்த்தி.. ஒரே ஆண்டில் 21வது டி20 வெற்றி சாதனை படைத்த இந்தியா
IND vs AUS 3rd T20 LIVE Score: இந்தியா-ஆஸ்திரேலிய டி20 போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்.. இதோ..
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்திய வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்திய அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விராட் கோலி 37 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
15 ஓவர்களின் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் விளாசி 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
13 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸி. அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை கம்மின்ஸ் எடுத்துள்ளார்.
3 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வீரர் டிம் டேவிட் 54 ரன்களுக்கு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
17 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
14வது ஓவரை வீசிய அக்ஷர் பட்டேல் இங்லீஸ் மற்றும் மேத்யூ வேட் ஆகியோரின் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
9 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வேல் 6 ரன்களில் ரன் அவுட்டாகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் 52 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
5 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வீரர் கேம்ரூன் க்ரீன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
4 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் விக்கெட்டை அக்ஷர் பட்டேல் எடுத்துள்ளார்.
3 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது. கேம்ரூன் க்ரீன் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்துள்ளார்.
இரண்டு ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி டி20 போட்டியில் முதல் ஓவரில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸி. அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான அணியில் புவனேஸ்வர்குமார் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் விவரம்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தற்போது வரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி 14 முறையும், ஆஸ்திரேலிய அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக தீபக் சாஹர் இடம்பெறுவார் என்று கருதப்படுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.
Background
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இதன்காரணமாக 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமமாக உள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள பும்ரா கூடுதல் பலமாக உள்ளார். அதேபோல் அக்ஷர் பட்டேல் சுழற்பந்துவீச்சு ஆஸ்திரேலியாவிற்கு சவலாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சு சற்று மோசமாக அமைந்துள்ளது. சாஹல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஒரளவு ரன்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். எனினும் அவர்கள் விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதத்தை இந்திய அணி கட்டுப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் அசத்தி வருகிறார். இவர் தொடர்ந்து சிறப்பாக ரன்களை குவித்து வருகிறார். அதேபோல் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தி வருகிறார். கடந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஒரளவு ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் இந்தப் போட்டியில் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. எனினும் பந்துவீச்சில் அனுபவ வீரர் கம்மின்ஸ் சொதப்பி வருகிறார். இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி விக்கெட் எடுக்க தடுமாறி வருகிறது. ஆடெம் ஸம்பா மட்டும் சுழற்பந்துவீச்சில் கலக்கி வருகிறார். அவருடைய பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது வரை 24 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்திய அணி 14 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா அணி விவரம்:
ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -