ENG vs BAN LIVE Score: 227 ரன்களுக்கு ஆல் அவுட்டான வங்கதேசம்! 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி!

England vs Bangladesh Score Live: இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உலகக் கோப்பை போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 10 Oct 2023 06:32 PM
227 ரன்களுக்கு ஆல் அவுட்டான வங்கதேசம்! 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி!

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். இதனால், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

227 ரன்களுக்கு ஆல் அவுட்டான வங்கதேசம்! 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி!

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். இதனால், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ENG vs BAN LIVE Score: லிட்டன் தாஸ் அவுட்..

வங்காள தேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 66 பந்தில் 76 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

ENG vs BAN LIVE Score: 20 ஓவர்கள் முடிவில்

20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது. 

ENG vs BAN LIVE Score: 100 ரன்களைக் கடந்த வங்காளம்..

19வது ஓவர் முடிவில் வங்காள அணி 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்துள்ளது. 

ENG vs BAN LIVE Score: 100 ரன்களை நெருங்கும் வங்காள தேசம்

4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் வங்காள தேசம் அணி 18 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் சேர்த்துள்ளத். 

ENG vs BAN LIVE Score: 15 ஓவர்களில் வங்காள தேசம்..

15 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது. 

ENG vs BAN LIVE Score: அரைசதம் எட்டிய லிட்டன் தாஸ்..

சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி வரும் லிட்டன் தாஸ் 40 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். 

ENG vs BAN LIVE Score: 11 ஓவர்களில் வங்காளம்..

11 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது. 

ENG vs BAN LIVE Score: 50 ரன்கள் சேர்த்த வங்காளம்..

9.2 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது. 

ENG vs BAN LIVE Score: மூன்றாவது விக்கெட்டினை இழந்த வங்காளம்.. கேப்டன் காலி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 9 பந்தில் ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

ENG vs BAN LIVE Score: ரிவ்யூவை இழந்த இங்கிலாந்து..

வங்காள தேச அணியின் லிட்டன் தாஸ் விக்கெட்டினை கைப்பற்ற இங்கிலாந்து அணி தனது ரிவ்யூக்களில் ஒன்றைப் பயன்படுத்தியது. ஆனால் அது இங்கிலாந்து அணிக்கு எதிர்மறையான முடிவினை எட்டியதால், இங்கிலாந்து அணியின் ரிவ்யூவ் வீணாகியுள்ளது. 

ENG vs BAN LIVE Score: மிஸ் ஆன ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பு..

இரண்டாவது ஓவரில் சிறப்பாக பந்து வீசி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப்ளே தனது ஹாட்ரிக் வாய்ப்பினை தவறவிட்டுள்ளார். 

ENG vs BAN LIVE Score: வந்தார்.. சென்றார்... சாண்டூ..

வங்காள தேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாண்டு தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

ENG vs BAN LIVE Score: முதல் விக்கெட்டினை இழந்த வங்காளம்...

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள வங்காள அணி தனது முதல் விக்கெட்டினை இரண்டாவது ஓவரின் 4வது பந்தில் இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் டன்சின் ஹசன் ஒரு ரன் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

ENG vs BAN LIVE Score: முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி..

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடுத்து மிரட்டியுள்ளது. 

ENG vs BAN LIVE Score: களமிறங்கியது வங்காள தேசம்..

365 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்காள தேசம் களமிறங்கியுள்ளது. 

வங்கதேச அணிக்கு 365 ரன்கள் டார்கெட்! இமாலய இலக்கை குவித்த இங்கிலாந்து!

வங்கதேச அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 364 ரன்களை எடுத்தது. 

வங்கதேச அணிக்கு 365 ரன்கள் டார்கெட்! இமாலய இலக்கை குவித்த இங்கிலாந்து!

வங்கதேச அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 364 ரன்களை எடுத்தது. 

ENG vs BAN LIVE Score: 300 ரன்களை கடந்த இங்கிலாந்து.. சதத்தை நோக்கி ஜோ ரூட்..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 41 ஓவர்களில் 300 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 82 ரன்களுடன் ஜோ ரூட் களத்தில் உள்ளார். 

ENG vs BAN LIVE Score: 20 ரன்களில் அவுட்.. ஏமாற்றம் அளித்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்..!

அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 20 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

ENG vs BAN LIVE Score: 140 ரன்களில் நடையைக்கட்டிய டேவிட் மாலன்.. 275 ரன்களில் இங்கிலாந்து அணி ஆதிக்கம்..!

107 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மாலன், மெஹந்தி ஹாசன் பந்தில் க்ளீன் போல்டானார். 

ENG vs BAN LIVE Score: 250 ரன்களை கடந்த இங்கிலாந்து அணி.. பவுண்டரிகளை விரட்டும் ரூட், மாலன்..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 36 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 

ENG vs BAN LIVE Score: அரை சதத்தை கடந்தார் ஜோ ரூட்.. விக்கெட் எடுக்க திணறும் வங்கதேசம்..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 44 பந்துகளில் அரை சதம் கடந்து ஜோ ரூட் விளையாடி வருகிறார்.

ENG vs BAN LIVE Score: 91 பந்துகளில் டேவிட் மாலன் சதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து அணி..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் மாலன், 91 பந்துகளில் சதம் கடந்து விளையாடி வருகிறார். 

ENG vs BAN LIVE Score: 52 ரன்களில் ஆட்டமிழந்த பேர்ஸ்டோவ்.. 21 ஓவர்களில் இங்கிலாந்து 136 ரன்கள்..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 21 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. 52 ரன்கள் அடித்திருந்த பேர்ஸ்டோவ், ஷகிப் அல் ஹாசனின் பந்தில் க்ளீன் போல்டானார். 

ENG vs BAN LIVE Score: 16 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி- 102/0.. விக்கெட் எடுக்க தடுமாறும் வங்கதேசம்..!

பேர்ஸ்டோவ் 54 பந்துகளில் அரைசதம் கடந்தார். மாலன் 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். 16 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்துள்ளது.

ENG vs BAN LIVE Score: 10 ஓவர்களில் பட்டையகிளப்பிய இங்கிலாந்து.. விக்கெட்டை தேடி வங்கதேசம்..!

10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் 29 ரன்களுடனும், மாலன் 32 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர், வங்கதேசம் விக்கெட்டுகளை தேடி வருகிறது.

ENG vs BAN LIVE Score: 7 ஓவர்களில் 40 ரன்களை கடந்த இங்கிலாந்து..!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. 

ENG vs BAN LIVE Score: 5 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி - 25/0

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது. 

ENG vs BAN LIVE Score: வங்கதேச அணியின் ப்ளேயிங் 11..!

தன்சீத் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, மெஹ்தி ஹசன் மிராஜ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தௌஹீத் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்.

ENG vs BAN LIVE Score: இங்கிலாந்து அணியின் ப்ளேயிங் 11..!

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், டாப்லி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

Background

இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி தரம்சாலா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.