காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியினருடன் இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


மழை காரணமாக 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், தொடக்கமே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரிலே இந்திய வீரராங்கனை மேக்னா சிங்கின் பந்தில் பாகிஸ்தான் தொடக்க வீராங்கனை ஈராம் ஜாவித் டக் அவுட்டாகினார். அடுத்து, முனிபா அலியுடன் கேப்டன் பிஸ்மா மரூப் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார்.




அணியின் ஸ்கோர் 50 ரன்களை எட்டியபோது கேப்டன் பிஸ்மா மரூப் 17 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் முனிபா அலி இந்திய வீராங்கனை ஸ்நேக்ரானா பந்தில் 32 ரன்களில் அவுட்டானார். அவர் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் வெளியேறினார்.


மேலும் படிக்க : IND vs PAK, CWG 2022: பாகிஸ்தானை கதிகலங்க வைத்த ஸ்மிரிதி மந்தனா..! மிரட்டல் வெற்றி பெற்ற இந்தியா..!


சிறப்பாக ஆடிய முனிபா அலி ஆட்டமிழந்த பிறகு பாகிஸ்தானின் ரன் வேகம் மிகவும் மந்தமாக குறைந்தது. அடுத்து வந்த ஆயிஷாவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 60 ரன்களை கடந்த பாகிஸ்தான் கடைசி 8 ஓவர்களில் ரன்கள் எடுக்க தடுமாறியது.




கடைசியில் ஓரளவு ரன்களை சேர்த்த அலியா ரியாஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 18 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா  4 ஓவர்கள் வீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராதா யாதவ் 3 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி 8 ஓவுர்களில் பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறியது. 


மேலும் படிக்க : சச்சினை மரியாதை இல்லாமல் பேசிய ஆஸ்திரேலிய வீரர் - கடுப்பான ரசிகர்கள்...என்ன நடந்தது?


மேலும் படிக்க : TNPL : டிஎன்பிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? : சேப்பாக்கம் - கோவை அணிகள் இன்று மோதல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண