சச்சின் டெண்டுல்கரை அவமரியாதையாக பேசியதாக இளம் ஆஸ்திரேலிய வீரரை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். 


இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் கடந்த  ஜூலை 28 ஆம் தேதி 22வது காமன்வெல்த்  விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போட்டியைத் தொடங்கிவைத்த நிலையில் முதல் நாளில் கலைநிகழ்ச்சிகள்,அணி வகுப்புகள் மட்டுமே நடைபெற்றது. மேலும் இந்த தொடரில் 24 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் போட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா  வெற்றி பெற்றது. 






முன்னதாக இப்போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் காமன்வெல்த்தில் கிரிக்கெட்டை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்றும், இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ்மார்னஸ் லாபஸ்சாக்னே, “ஒப்புக்கொள்கிறேன் சச்சின். முதல் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா மோதுவது சிறப்பு” என தெரிவித்திருந்தார். 






ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் வீரரான  மார்னஸ்மார்னஸ் லாபஸ்சாக்னே இதுவரை 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 677 ரன்களும், ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் சச்சினுக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் நடக்கலாமா?. அவர் அறிமுகம் ஆகும் போது நீங்கள் குழந்தையாக இருந்துப்பீர்கள் என கூறி கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண