டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றது. 


டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்றது. 


லீக் ஆட்டத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நெல்லை சூப்பர் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த அரையிறுதி ஆட்டத்தின் முடிவில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனிடையே டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 






இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை பொறுத்தவரை முதல் 2 ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பின் நடந்த 5 ஆட்டங்கள், முதல் தகுதிச்சுற்று போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் கோவை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்விகளோடு கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்தது. வெளியேற்றுதல் போட்டியில் மதுரையையும், 2 ஆம் தகுதி சுற்றில் நெல்லை அணியையும் வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. 


இந்த போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2 ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 லட்சமும் பரிசு வழங்கப்படும். இந்த போட்டியை பொறுத்தவரை 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


சேப்பாக் அணியில் கவுசிக் காந்தி (கேப்டன்), ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ்குமார், சோனு யாதவ், சித்தார்த், சந்தீப் வாரியர், அலெக்சாண்டர் ஆகிய வீரர்களும், கோவை அணியில் ஷிஜித் சந்திரன், ஷாருக்கான் (கேப்டன்), முகிலேஷ், அபிஷேக் தன்வார், திவாகர், மனிஷ் ரவி, அஜித் ராம், பாலு சூர்யா ஆகிய வீரர்களும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண