India vs Pakistan Hockey LIVE: இந்திய அணி அபார வெற்றி; 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி
India vs Pakistan Hockey LIVE: 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
இந்தியாவுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டுள்ளது, மேலும் ஜப்பான் நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் மந்தீப் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக மற்றொரு கோலை அடித்துள்ளனர். இதனால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பாதையில் உள்ளது.
மூன்றாவது சுற்று முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
மூன்றாவது சுற்றின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஹுஜ்ரஸ் சிங் பெனால்டி கார்னர் மூலம் இந்திய அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூன்றாவது சுற்று தொடங்கியது.
பாகிஸ்தான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு தற்போது நிலையை வைத்து பார்க்கும்போது வாய்ப்பில்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
போட்டியில் இந்திய அணி 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இரண்டாவது சுற்றின் இறுதி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் இந்திய அணிக்காக மற்றுமொரு கோல் அடித்து அதகளப்படுத்தியுள்ளார்.
முதல் சுற்று முடிவில் இந்திய அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் அணி இன்னும் தனது கோல் கணக்கை துவங்காமல் உள்ளது.
ஹர்மன்ப்ரீத் சிங் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதனை கோலாக மாற்றியுள்ளார்.
முதல் சுற்றின் கடைசி நிமிடத்தில் இந்திய அணி இந்த போட்டியின் முதல் கோலை அடித்துள்ளது.
இந்திய அணியின் நீலகண்டா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து கோல் அடிக்க முயற்சி செய்த நிலையில், அதனை பாகிஸ்தான் அணி முறியடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி தனக்கு இருந்த ரிவ்யூவை இழந்துள்ளது.
போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணி தனது முதல் கோலை அடிக்க முயற்சி செய்தது. அது கோலாக முடிய, இந்திய அணி ரிவ்யூவ் கேட்டதால் கோல் திரும்பப் பெறப்பட்டது.
இந்திய ஹாக்கி அணியில் உள்ள தமிழ்நாடு வீரர் செல்வம் கார்த்தியை தமிழ்நாடு முதலமைச்சர் கௌரவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியைக் காணவும் போட்டியை துவக்கி வைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்துள்ளார்.
பாகிஸ்தான்: அக்மல் ஹுசைன், அஹ்திஷாம் அஸ்லாம், அகில் அகமது, அர்ஷத் லியாகத், அப்துல் ரானா, அப்துல் ஹன்னான், ஜிக்ரியா ஹயாத், உசாமா பஷீர், உமர் பூட்டா, முஹம்மது சுஃப்யான் கான், அஃப்ராஸ்.
சௌத் கொரியாவுக்கு எதிரான போட்டியை மலேசிய அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் நான்காவது மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டி தொடங்கியுள்ளது.
மூன்றாவது சுற்று முடிவில் மலேசியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது சுற்று முடிவில் மலேசியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சிறப்பாக ஆடிவரும் மலேசியா போட்டியின் முதல் கோலை அடித்துள்ளது.
முதல் சுற்று முடிவில் கொரியா மற்றும் மலேசியா அணிகள் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் உள்ளனர்.
போட்டி தொடங்கி 4வது நிமிடத்தில் மலேசிய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அந்த அணி மிஸ் செய்துள்ளது.
மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது.
கொரியா: ஜேஹியோன் கிம், மஞ்சே ஜங், ஜங்ஜுன் லீ, வூ சியோன் ஜி, சியோலியோன் பார்க், ஹைஸுங் லீ, சுங்யுன் கிம், சியுங்ஹூன் லீ, ஹியோங்ஜின் கிம், ஜுயோங் லீ, ஜிஹுன் யாங்
மலேசியா: ஹபிசுதீன் உத்மான், முஜாஹிர் அப்து, மர்ஹான் ஜலீல், பைசல் சாரி, அமினுதீன் முகமது, ஃபிர்ஹான் அஷாரி, ரஸி ரஹீம், ஃபைஸ் ஜலி, அசுவான் ஹசன், அபு கம்லா அஸ்ராய், அமிருல் அஸாஹர்.
ஜப்பான் அணி சீனாவுக்கு எதிரான போட்டில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஜப்பான் அணி தனது இரண்டாவது கோலை அடித்துள்ளது.
போட்டியின் 46வது நிமிடத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சீன அணி தவறவிட்டுள்ளது.
நான்வது சுற்று மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
மூன்றாவது சுற்று முடிவில் ஜப்பான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது சுற்றில் கோல் போட கிடைத்த வாய்ப்பை இரண்டாவது முறையாக சீனா அணி தவறவிட்டுள்ளது.
சீன வீரர் ஜூகுவுக்கு களநடுவர் க்ரீன் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதனால் ஜூகு போட்டியில் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு களமிறங்குவார்.
சீன அணிக்கு கோல் போட கிடைத்த வாய்ப்பை கடைசி நொடியில் ஜப்பான் அணி முறியடித்துள்ளது.
மூன்றாவது சுற்று தொடங்கியதுமே ஜப்பான் அணி மிகவும் ஆக்ரோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூன்றாவது சுற்று தொடங்கியது. இந்த சுற்று முதல் இறுதிச் சுற்று வரை போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது சுற்றில் ஜப்பான் மற்றும் சீன அணிகள் கோல் எதுவும் அடிக்காத காரணத்தால், முதல் சுற்று முடிவே நீடிக்கிறது. ஜப்பான் அணி ஒரு கோல் அடித்தும் சீனா அணி கோல் எதுவும் அடிக்காமலும் உள்ளது.
போட்டியின் இரண்டாவது சுற்றில் ஜப்பான் அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
சீனா அணி இந்த போட்டியில் முதல் முறையாக கோல் அடிக்க பந்தை கோல் வளையத்திற்குள் தள்ள முயற்சித்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
ஜப்பான் அணி வீரர் கின்கி மிடானிக்கு கீரீன் கார்டு வழங்கி அவரை வெளியேற்றினார் நடுவர். அவர் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு போட்டியில் களமிறங்குவார்
போட்டியின் 21வது நிமிடத்தில் ஜப்பான் அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
முதல் சுற்று முடிவில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகிக்கிறது. சீனா அணி இன்னும் கோல் கணக்கை துவக்காமல் உள்ளது.
முதல் சுற்று முடிவில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகிக்கிறது. சீனா அணி இன்னும் கோல் கணக்கை துவக்காமல் உள்ளது.
ஜப்பான் அணியின் ஷோதா யமடா தனது அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்துள்ளார்.
சிறப்பாக ஆடிவரும் ஜப்பான் அணி முதல் சுற்றிலேயே தனது கோல் கணக்கை துவக்கியுள்ளது.
சீனா மற்றும் ஜப்பன் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது.
ஜப்பான் மற்றும் சீனா, கொரியா மற்றும் மலேசியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
ஜப்பான்: தகாஷி யோஷிகாவா, ஷோடா யமடா, செரன் தனகா, கென்டாரோ ஃபுகுடா, டைகி தகடே, யூமா நாகாய், மனாபு யமாஷிதா, கென் நாகயோஷி, ரியோசி கட்டோ, மசாகி ஒஹாஷி, கைடோ தனகா.
புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் ஜப்பான் அணி 4 கோல்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும்.
Background
2023 ஆண்களுக்கான ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், லீக் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்ற.
இந்தியா vs பாகிஸ்தான்
சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் தொடரில் இன்றோடு லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. எல்லா அணிகளும் இன்று அவர்களது கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் ஆடும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை முதன் முறையாக இந்தியாவில் நடத்துவதால் இந்திய அணி கோப்பையை வெல்ல எல்லோரையும் விட ஒரு படி முன்னே உள்ளது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இந்த போட்டியையும் வென்று அந்த இடத்திலேயே இருந்து லீக் போட்டிகளை முடிக்க ஆர்வமாக இருக்கும்.
ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்தியா
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த சந்திப்பு அடுத்து வரக்கூடிய ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். எல்லா அணிகளும் 4 போட்டிகள் ஆடிய பிறகு எந்த போட்டியிலும் தோல்வியடையாத ஒரே அணியாக இந்தியா உள்ளது. ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 1-1 என்ற டிரா மட்டுமே இந்திய அணிக்கு ஒரு களங்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது. அதன் பின் மிகவும் திறமையான மலேசியா அணியை 5-0 என வீழ்த்தியது. ஜப்பான் போலவே கொரியாவும் இந்தியாவிற்கு கடினமான சவாலை அழித்தளனர். இருப்பினும் இறுதியில் 3-2 என்று வென்று முன்னிலையில் நீடிக்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபியில் பாகிஸ்தான்
இந்தியா போல் அல்லாமல், பாகிஸ்தானுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைய இருந்தன. அவர்களின் தொடரே மலேசியாவிடம் அடைந்த தோல்வியுடன் தொடங்கியது. ஆனால் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு எதிரான டிரா செய்து ஆட்டத்தில் நீடித்தனர். பின்னர் சீனாவுக்கு எதிராக வெற்றி பெற்று, தற்போது அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது.
அரை இறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் நாள்
பாகிஸ்தான் அணி இந்த போட்டியை வென்றால் நான்காம் இடம் உறுதி ஆகும். ஆனால் தோல்வி அடைந்தால் ஜப்பான் அணிக்கு சிறிய வாய்ப்பு கிடைக்கும். சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான போட்டியின் முடிவில் அவர்களின் தலைவிதி இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு முன்பே ஜப்பான் - சீனா போட்டிகள் நடைபெற்று விடுவதால், பாகிஸ்தான் வென்றே ஆக வேண்டுமா என்பது அந்த போட்டிக்கு பின் தெரிந்துவிடும். ஏனென்றால் ஜப்பான் வென்றாலும் கோல் வித்தியாசம் சிறிதாக இருந்தால் பாகிஸ்தானுக்குதான் வாய்ப்பு.
ஆனால் பெரிய வெற்றியை பெற்றால் பாகிஸ்தானின் இடம் கேள்விக்குறியாகும். ஒரு வேளை மலேசியா தென் கொரியாவை ஒரு பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கும் பட்சத்தில், தென் கொரியாவை வெளியே அனுப்பி பாகிஸ்தான் உள்ளே வர வாய்ப்புகள் இருக்கும். எனவே இன்றைய 3 போட்டிகளும் அடுத்த இரண்டு அரை இறுதி போட்டியாளர்களை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும். மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மலேசியா (9 புள்ளிகள்), தென் கொரியா (5), பாகிஸ்தான் (5), ஜப்பான் (2), சீனா (1) ஆகிய இடங்களிலும் உள்ளன.
இந்திய அணி: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதக், ஹர்மன்ப்ரீத் சிங் (சி), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்ப்ரீத் சிங், சுமித், ஜக்ராஜ் சிங், வருண் குமார், ஹர்திக் சிங் (விசி), ஷம்ஷர் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், எஸ்.கார்த்தி, குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், பவன், மன்தீப் சிங்.
பாகிஸ்தான் அணி: முகமது உமர் பூட்டா (கேப்டன்), ராணா அப்துல் வஹீத் அஷ்ரப் (துணை கேப்டன்), அக்மல் ஹுசைன், அப்துல்லா இஷ்டியாக் கான், முகமது அப்துல்லா, முகமது சுஃப்யான் கான், எஹ்திஷாம் அஸ்லாம், ஒசாமா பஷீர், அகில் அகமது, அர்ஷத் லியாகத், முகமது லியாகத், ஹனான் ஷாஹித், ஜகாரியா ஹயாத், ரோமன், முகமது முர்தாசா யாகூப், முகமது ஷாஜைப் கான், அஃப்ராஸ், அப்துல் ரஹ்மான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -