Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள தகவலை, நாகார்ஜுனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகரும் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, மூத்த மகனின் திருமணம் நடந்து முடிந்த கையேடு இரண்டாவது மகன் திருமணத்திற்கு தயாராகி உள்ளார். நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா ஜோடிக்கு பிறந்தவர் அகில் அக்கினேனி. தன்னுடைய தந்தை போலவே திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அகில், ஒரு வயதிலேயே 'சிசின்ரி' என்கிற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில், நாகார்ஜுனா தயாரிப்பில் அவருடைய குடும்ப திரைப்படமாக எடுக்கப்பட்ட 'மனம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு 'அகில்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மோசமான தோல்வியை தழுவியது. இந்த படத்திற்கு பின்னர் ஹலோ, மிஸ்டர் மஜ்னு, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர், என இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தில் அதிகம் மெனக்கெட்டு நடித்தும் கூட இதுவரை ஒரு வெற்றி கூட கொடுக்காத நாயகனாகவே உள்ளார்.
கடந்த ஆண்டு அகில் நடிப்பில் வெளியான 'ஏஜென்ட்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி குப்புற படுத்த நிலையில், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானாவை சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அகிலுக்கு அவருடைய காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அகிலுக்கு ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு, ஸ்ரேயா என்கிற அவருடைய காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் அகில் மற்றும் ஸ்ரேயா எழுந்த பிரச்சனை இருவரும் பிரேக் அப் செய்ய காரணமாக அமைந்தது.
இந்த காதல் தோல்விக்கு பின்னர், திருமணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ள அகில், தன்னுடைய காதலி ஜைனப் ராவ்ஜி என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
அகில் - ஜைனப் ராவ்ஜியின் புகைப்படங்களை வெளியிட்டு நாகார்ஜுனா போட்டுள்ள பதிவில், எங்கள் மகன் அகில் அக்கினேனி, எங்கள் மருமகள் ஜைனப் ராவ்ட்ஜி என்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்கள் குடும்பத்தில் ஜைனப்பை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தயவுசெய்து எங்களுடன் சேர்ந்து இந்த இளம் தம்பதியினரை வாழ்த்துங்கள். மேலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் உங்கள் எண்ணற்ற ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு வேண்டும் என பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் இந்த இளம் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -