Semi-final 2 India vs Japan Hockey LIVE: ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..!
Semi-final 2 India vs Japan Hockey LIVE: இந்த ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய போட்டிகள் குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
5வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது 5வது கோலை இறுதிச் சுற்றில் அடித்துள்ளது.
ஜப்பான் இந்தியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் இறுதிச் சுற்று துவங்கியது.
இந்தியா ஜப்பான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் சுமித் மூன்றாவது சுற்றில் இந்திய அணிக்கான 4வது கோலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அடித்து அதகளப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது சுற்று தொடங்கியதில் இருந்து இந்திய அணி நேரத்தை கடத்துவதிலேயே கவனமாக இருக்கிறது.
இந்தியா ஜப்பான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சுற்று தொடங்கியது.
இரண்டாவது சுற்று முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தனது மூன்றாவது கோலை அடித்து அமர்க்களப்படுத்தியுள்ளது.
இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தனது பெனால்டி கார்னர் வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி அதனை கோலாக மாற்றியுள்ளது.
இந்திய அணிக்கு இரண்டாவது சுற்றில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணி தனது முதல் கோலை அடித்துள்ளது.
இரண்டாவது சுற்றின் இடையில் ஜப்பான் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் அதனை அவர்களே வீணடித்து விட்டனர்.
இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று தொடங்கியது.
முதல் சுற்று முடிவில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் தரப்பில் ஒரு கோல் கூட போடவில்லை.
போட்டியின் முதல் சுற்றில் இரு அணிகளும் மிகவும் ஆக்ரோசமாக விளையாடி வருகின்றன.
இந்திய அணி தனது முதல் கோல் அடிக்க முயற்சி செய்தது; ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இந்திய அணி கோல் அடிக்கும் வாய்ப்பை கடைசி நொடியில் ஜப்பான் அணி தடுத்துவிட்டது.
இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்று தொடங்கியது.
இந்தியா ஜப்பான் அண்களுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஆரம்பம் ஆகியது.
இந்திய அணியின் ஸ்ரீஜேஷ் தனது 300வது சர்வதேச ஹாக்கி போட்டியில் களமிறங்குகிறார்.
ஜப்பான்: தகாஷி யோஷிகாவா, ஷோடா யமடா, செரன் டனகா, கென்டாரோ ஃபுகுடா, டைகி தகடே, டகுமா நிவா, மனாபு யமாஷிதா, கென் நாகயோஷி, ஜென்கி மிதானி, மசாகி ஒஹாஷி, கோசி கவாபே
இந்தியா: பிஆர் ஸ்ரீஜேஷ், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், மன்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், சுமித், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங்.
இந்தியா மற்றும் ஜப்பன் அணியினர் மைதானத்திற்குள் வந்துள்ளனர்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதில் இந்திய அணி ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
நடப்புச் சாம்பியன் கொரிய அணியை மலேசிய அணி 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி மலேசிய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நடப்புச் சாம்பியன் சௌத் கொரியாவை வீழ்த்தி மலேசிய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதலாவது அரையிறுதி போட்டியில் மலேசிய அணி சௌத் கொரியா அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
மலேசிய அணி தனது 6வது கோலையும் அடித்துள்ளது. இதன் மூலம் மலேசிய அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
மலேசியா அணி தனது ஐந்தாவது கோலை அடித்து தனது வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
மலேசியா சௌத் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் இறுதிச் சுற்று துவங்கியது.
மிகவும் விறுவிறுப்பாக சென்ற மூன்றாவது சுற்று முடிவுக்கு வந்துள்ளது. இதில் மலேசிய அணி 4 கோல்களுடனும் கொரிய அணி 2 கோல்களுடனும் உள்ளது.
கொரிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மீண்டும் வீணடித்துள்ளது.
கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொரியா அணி தனக்கு கிடைத்த ஷூட் அவுட் வாய்ப்பை கோலாக மாற்றுவதில் சொதப்பியுள்ளது.
கொரிய அணிக்கு ஷூட் அவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலேசிய அணி மூன்றாவது சுற்றில் நேரத்தை போக்கவே முயற்சி செய்துகொண்டுள்ளது.
கொரிய அணியின் கியோபோயம் கிம்மிற்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், அவர் போட்டியில் இருந்து இரண்டு நிமிடங்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்.
மலேசியா மற்றும் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மூன்றாவது சுற்று துவங்கியது.
இரண்டாவது சுற்று முடிவில் மலேசிய அணி 4 கோல்களும் சௌத் கொரியா அணி 2 கோல்களும் அடித்துள்ளது.
பெனால்டி கார்னர் வாய்ப்பை கொரிய அணி கோலாக மாற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது.
கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலேசிய அணி தனக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி 4-2 என முன்னிலை வகிக்கிறது.
முதல் சுற்று முடிவில் மலேசியா அணி சௌத் கொரியா அணியை 2-2 என சமன் செய்தது. இரண்டாவது சுற்றில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடிக்க மலேசிய அணி தற்போது 3 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.
மலேசிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மிகச் சரியாக கோலாக மாற்றியது.
மலேசிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்று தொடங்கியுள்ளது.
மிகவும் விறுவிறுப்பாக சென்ற முதல் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளது.
கொரிய அணி சிறப்பான முறையில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி, 2-2 என போட்டியை சமன் செய்துள்ளது.
மலேசியா அணி தற்போது இரண்டு கோல்கள் அடித்து ஒரு கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
மலேசிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதனை கோலாக மாற்றியுள்ளது.
மலேசிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றும் முயற்சியில் தோல்வியைத் தழுவியது.
கொரிய அணி கோல் அடித்த அடுத்த நிமிடத்திலேயே மலேசிய அணி தனது முதல் கோலை அடித்துள்ளது.
போட்டி தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே சௌத் கொரியா அணி தனது முதல் கோலை பதிவு செய்துள்ளது.
கொரியா மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி தொடங்கியது.
தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க பிரதமருக்கோ அல்லது பாஜகவினருக்கோ எந்தவிதமான உரிமையும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
இறுதிச்சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி 6-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
போட்டியின் கடைசி மூன்றாவது நிமிடத்தில் பெனால்டி காரனர் வாய்ப்பை சீன அணி தவறவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி 6 கோல்கள் அடித்து தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி தனது 6வது கோலை அடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி பெனால்டி கார்னர் வாய்ப்பில் மட்டும் மொத்தம் மூன்று கோல்கள் என மொத்தம் 5 கோல்கள் அடித்தது.
பாகிஸ்தான் அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அதனை கோலாக மாற்றியுள்ளது.
சீனா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் இறுதிச் சுற்று தொடங்கியது.
போட்டியின் மூன்றாவது சுற்றில் பாகிஸ்தான் அணி நேரத்தை வீணாக்குவதிலேயே கவனம் செலுத்தியது.
மூன்றாவது சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது சுற்றின் துவக்கத்தில் சீன அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தனது முதல் கோலை அடித்தது.
சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் 3வது சுற்று தொடங்கியது.
இரண்டாவது சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் சுற்று முடிவில் பாகிஸ்தான் அணி 4 கோல்கள் அடித்து அதகளப்படுத்தியுள்ளது. சீன அணி இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
சீனா அணி இந்த தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் உள்ளது. இன்றைய போட்டியில் சீன அணி பாகிஸ்தானை வென்றால், அதுதான் முதல் வெற்றியாக பதிவாகும்.
பாகிஸ்தான் அணி மூன்று முறை கோப்பையை தனதாக்கியுள்ளது. ஆனால் இம்முறை அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் 5வது இடத்துக்கு சீனாவுடன் மோதுகின்றது.
Background
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.
போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன.
நாளை அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியில் டிரா செய்துள்ளது. அது ஜப்பான் அணிக்கு எதிராகத்தான். அந்த அணியுடன் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் களமிறங்குவதால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டு முதல் இதுவரை (இந்த ஆண்டை சேர்த்து) 7 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மொத்தம் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த மோதலில், இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஜப்பான் இரண்டில் வெற்றி பெற்றது. எஞ்சிய இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
அதேபோல் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் இதுவரை அனைத்து வகை போட்டிகளிலும் மொத்தம் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்திய அணியின் கரமே உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் நாளை இரு அணிகள் மோதுவதால் இந்திய அணியின் கரமே உயர்ந்து காணப்படும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
போட்டி டிரா ஆனால்?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -