கூட்டத்தில் குழந்தைகள் தவறினால் உடனே மீட்கலாம்: திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பேண்ட்
திருவண்ணாமலை தீபம்: சிறுவர்கள் பாதுகாப்புக்கு கைகளில் கட்டப்படும் சிறப்பு பேண்ட்!

திருவண்ணாமலையில் சிறுவர்களை பாதுகாக்கும் விதமாக சிறுவர்கள் கையில் பாதுகாப்பு பேண்ட் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வைக்கான திருவண்ணாமலைக்கு 40 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் நேற்று இரவு முதல் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு உள்ளார்கள்.
அவ்வாறு கிரிவலம் வரும் பக்தர்கள் தங்களுடன் அழைத்து வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்கும் விதமாக அவர்களது கைகளில் பெற்றோர்கள் மொபைல் நம்பர் மற்றும் தகவல்கள் அடங்கிய பேண்டை அணிவிக்கும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இதன்மூலம் கூட்டத்தில் தவறு குழந்தைகளை எளிதாக அடையாளம் காணும் விதமாக இந்த பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15- ஆம் தேதி அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் கோலகலமாக தீபத் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து காலையிலும் இரவிலும் சாமி 10 நாட்கள் நான்கு மாடி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிலையில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் கருவறை அருகே சிவாச்சாரியார் வேதமந்திரம் முழுக்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீப திருவிழா காண உள்ளூர் ,வெளியூர் ,வெளி மாநிலமான ஆந்திரா, கர்நாடகா , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலத்தை சேர்த்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அண்ணாமலையார் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி 14 கிலோமீட்டர் கிரிவலம் வருகின்றனர் பக்தர்கள். மேலும் இந்த கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 15000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















