தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அனுமந்தன்பட்டியில் தமிழகத்திலேயே வரலாறு சிறப்புமிக்க புனித தூய ஆவியானவர் ஆலயத்தின் சவேரியாரின் 145 வது ஆண்டு சப்பரப்பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் புனித தூய ஆவியானவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் டிசம்பர் மாதம் புனித சவேரியாரின் சப்பரப்பவனி திருவிழாவினை நடத்துவது வழக்கம்.
Telangana Election Results: ஆட்சியை இழந்த சந்திரசேகர் ராவ்: தோல்விக்கான காரணங்கள் என்ன? - ஓர் அலசல்
இந்த வருடம் 145வது ஆண்டு சப்பரப்பவனி திருவிழாவினை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கினார்கள். விழாவின் முன்னதாக பிரான்சிஸ் சேவியர் மற்றும் சிறப்பு அருள் தந்தையர்கள் புனித திருப்பலி நிகழ்ச்சிகளை நடத்தினார் . அதனைத் தொடர்ந்து புனித சவேரியார் திரு உருவச் சிலை மற்றும் காவல் சம்மனசு திருஉருவச் சிலைகளை அருள் தந்தை அவர்கள் மந்திரித்து தீர்த்தம் தெளித்து அருளாசி வழங்கினர்.
மந்திரித்த திருவுருவ சிலைகள் சப்பர பல்லக்கில் வைத்து நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் சென்று சப்பரப்பவனி ஊர்வலத்தை நடத்தினார்கள். சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் இறைவழிபாடு நடத்தும் விதமாக உப்பு, மெழுகுவர்த்தி பட்டு துணிகள் காணிக்கை மலர்கள் மற்றும் மலர் மாலை அணிவித்து இறை வழிபாடுகளை நடத்தினார்கள். மேலும் குழந்தைகளை சவேரியாரின் காலடியில் வைத்து சிறப்பு ஆசீர்வாதங்களை பெற்றனர்.
Election Results 2023 LIVE: தெலங்கானாவுடனான எங்களின் பிணைப்பு உடைக்க முடியாதது - பிரதமர் மோடி ட்வீட்
விழாவில் நகரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து பெருந்திரளாக கலந்து கொண்டு ஊர்வலத்தினை வெகு விமர்சையாக நடத்தினார்கள்.அதிகாலை 3 மணி வரை தெருக்களின் முக்கிய வீதிகளில் சப்பரப்பவனியானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அருளும் ஆசியும் வழங்கப்பட்டது.