Cyclone Michaung LIVE: சென்னையில் நாளை முழு அளவில் புறநகர் ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை
Cyclone Michaung LIVE Updates தமிழகத்தில் கனமழைக்கு காரணமாக டிசம்பர் 1 முதல், 8 உயிரிழப்பு ஏற்பட்டது என வருவாய்த்துறை தகவல் தெரிவித்துள்ளது
சென்னையில் புறநகர் ரயில்சேவையை நாளையே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆந்திரா கடற்கரைக்கு அருகே பாபட்லா பகுதியில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல். அடுத்த 2 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
ஆந்திரா கடற்கரைக்கு அருகே பாபட்லா பகுதியில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல். மதியம் 12.30 மணியிலிருந்து 2.30 மணிவரை தீவிர புயலாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையை கடக்க உள்ளது.
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் இன்னும் 4 மணி நேரத்தில் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையை கடக்க உள்ளது.
புயல், மழையால் பாதித்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு விரவாக நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் தமிழகத்தில் ஒரு கோடி பேர் பாதிப்பு, தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மக்களவையில், திமுக எம்.பி., டி.ஆர். பாலு பேச்சு.
மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இணைய சேவை பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் எதிரொலியால் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
வரலாறு காணாத மழையால் தமிழகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிவாரணப்பணிகளுக்காக ரூ.5000 கோடி தேவை என திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லூர் அருகே 20 கி.மீ தூரத்தில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 170 கி.மீ தூரம் விலகி சென்றுள்ளது. இன்று முற்பகல் ஆந்திரா அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் 4 ஆயிரம் கோடி பணிகளினால்தான் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
2015-இன் போது வந்தது செயற்கை வெள்ளம். இது இயற்கை வெள்ளம். செம்பரம்பாக்கம் நீர் முன்கூட்டியே திறந்துவிடப்பட்டது - முதல்வர் ஸ்டாலின்
சென்னையைக் கடந்த மிக்ஜாம் புயல் ஆந்திராவை தாக்கி வருகின்றது. இதனால் ஆந்திராவின் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உணவு வழங்கி வருகின்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை ஆய்வு செய்ய களத்தில் இறங்கியுள்ளார்.
தமிழகத்தில் கனமழைக்கு காரணமாக டிசம்பர் 1 முதல், 8 உயிரிழப்பு ஏற்பட்டது - வருவாய்த்துறை தகவல்
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழைக்கு சென்னையில் ஒருவர், செங்கல்பட்டில் 7 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் இன்ன பிற செயலி மூலமாகவே தொடர்பு கொள்ள முடிவதாக தகவல்
சென்னையில் மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், வருகை தரும் 41 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஓரிரு மணிநேரத்தில் படிப்படியாக மின்சாரம் விநியோகிக்கப்படும் - மின்சார வாரியம் அறிவிப்பு
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு - செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தது திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு
ஆந்திராவில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் சென்னையில் 2 நாட்களுக்குப் பிறகு சூரியன் தலைகாட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
மிக்ஜாம் புயலால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பல பகுதிகளிலும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தகவல்
சென்னையில் மழை முற்றிலுமாக நின்றது - ஆங்காங்கே இலேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை நின்றதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் வேகமெடுத்துள்ளது. மீட்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைநகர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது - புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் போது 90 கி.மீ., முதல் 110 கி.மீ, வரை காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் அருகே 20 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. ஒரு புயலுக்கு கண் பகுதி, மையப்பகுதி, வால் பகுதி என 3 பகுதிகள் உள்ளது. அந்த வகையில் முதலில் புயலின் கண் பகுதி தற்போது கடக்க ஆரம்பித்துள்ளது. இந்த 3 பகுதிகளும் முழுமையாக கரையை கடப்பதற்கு 5 மணி நேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முற்பகல் 11 மணி வாக்கில் மிக்ஜாம் தீவிர புயல் கரையை கடந்து புயலாக வலுவிழக்கும்.அதன்பின் ஆந்திராவின் உள்மாவட்டங்களில் பயணித்து தீவிர காற்றழுத்தமாக மேலும் வலுவிழக்கும்.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயங்குமென்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்பு காரணமாக இன்று (டிசம்பர் 5) பொது விடுமுறை விடப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் வடக்கு திசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - சென்னையில் பல இடங்களிலும் மழைநீர் வடியத் தொடங்கியதால் மக்கள் நிம்மதி
மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி சென்றாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு பொதுமக்கள் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 30 கி மீ கிழக்கு-வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று காலை ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்!
ஆந்திரா கடலோரம் நுழைந்தது தீவிரப் புயலான மிக்ஜாம் - சென்னையிலிருந்து 140 கி.மீ. தொலைவிற்கு விலகியது. தற்போது நெல்லூருக்கு தென்கிழக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள மிக்ஜாம் புயல், நாளை முற்பகல் 11.30 மணி அளவில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே உள்ள பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கும். கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு வந்தே பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்டவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் புறநகர் சேவை ரயில் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பூண்டிக்கு ஏரிக்கு வந்துக் கொண்டிருக்கும் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர். அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, இரு ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு அவசர எண்களை தமிழக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. 1913, 18004254355, 18004251600, 18004255109. இந்த எண்களில் அழைத்தால், 24 மணி உதவிகள் கிடைக்கும் என அரசு அறிவிப்பு.
சென்னையிலிருந்து வடக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல், தீவிர புயலாக வடக்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால், சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் தகவல். நள்ளிரவிற்குப் பிறகு மழை தாக்கம் பெருமளவு குறையும் என கணிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் 130 ஆம்புலன்ஸ்கள் மூலம் கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளதாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழந்துள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 16 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், 67 குடிசைகள் சேதமடைந்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை காலை வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு - பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மரங்கள், சாலைகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் எதிரொலி : செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 12,000 கன அடியாக இருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்பு..
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை பாதிப்பு காரணமாக நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை விடப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 8000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி இரவு முதல் தொடரும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாளை நடைபெறவிருந்த அண்ணா, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் மழை சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கனமழை மற்றும் பலத்த காற்று சார்பாக சென்னை முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மேயர் ப்ரியா கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் இன்றிரவு முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தில் இருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டு வருவதால் சாலைகளில் தேங்கிய நீரின் அளவு குறைந்துள்ளது.
தெற்கு ரயில்வே சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை வரும் வந்தே பாரத் ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னைக்கு வரக்கூடிய மற்றும் சென்னையில் இருந்து செல்லக்கூடிய மொத்தம் 20 ரயில்களை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. முதலமைச்சர் கூடுதல் பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப கோரிக்கை வைத்துள்ளார். அமித் ஷாவும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
சென்னையில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. முதலமைச்சர் கூடுதல் பேரிடர் மீட்பு பணிகளை அனுப்ப கோரிக்கை வைத்துள்ளார். அமித் ஷாவும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இனி மெல்ல மெல்ல குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருங்குடி - 29 செ.மீ.
ஆவடி - 28 செ.மீ
ஆலந்தூர் - 25 செ.மீ.
அடையார் - 24 செ.மீ.
மீனம்பாக்கம் - 23 செ.மீ.
நுங்கம்பாக்கம் - 23 செ.மீ.
புழல் - 23 செ.மீ.
கோடம்பாக்கம் - 22 செ.மீ.
சோளிங்கநல்லூர் - 21 செ.மீ.
பள்ளிக்கரணை - 21 செ.மீ.
பொன்னேரி - 21 செ.மீ.
மீனம்பாக்கத்தில் அதிகப்படியாக 104 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை மொத்தம் 2.50 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும் இதுவரை 33 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் : சீற்றம் அதிகளவு உள்ளதால், வெள்ள நீரை கடல் உள்வாங்கவில்லை - மாநகராட்சி ஆணையர்
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் எக்ஸ்ப்ரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் 6 ஆயிரம் கன அடிக்கு மேல் திறந்த விடப்பட்டுள்ளதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாகி உள்ளது. இதனால் போக்குவரத்து முக்கிய சாலைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்து செல்ல இரவு நேரம் வரை ஆகலாம் - வெதர்மேன் ப்ரதீப் ஜான்
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 5.12.2023 நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக வைகை, பல்லவன் ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் : தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
வட தமிழ்நாடு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் அதன் தாக்குதலை தொடங்கி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணி நடைபெறும் வளாக நீரில் மூழ்கியது.
செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது
சென்னையில் அதிகளவில் கனமழை பெய்து வருவதால் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது : நீரின் வரத்தை பொறுத்து ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் கூடுதலாக 500 கன அடி நீர் திறக்க ஏற்பாடு
மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி நகர தொடங்கிய நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் இருபெரும் நதிகளான அடையாறு, கூவம் ஆகிய இரு நதிகளிலும் வெள்ளநீர் கரைபுரண்டோடுவதால் கரையோரத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தேவையான மீட்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மிரட்டும் மிக்ஜாம் : கனமழை நீடிப்பதால், சென்னை விமான நிலையம் இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
“மிக்ஜாம்” புயலால் பெய்த கனமழையால் சின்னாபின்னமான வட தமிழ்நாடு மாவட்டங்களில் மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினர் களம் கண்டுள்ளனர். கூடுதலாக 3 குழுக்கள் பெங்களூரில் இருந்து வரவழைக்க முடிவு
2015-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் தற்போதுதான் மிக அதிகளவு மழை பதிவாகியுள்ளது - வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
மிக்ஜாம் புயலால் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி நீரின் அளவு அதிகரித்து வருகிறது. ஏரிக்கு பத்தாயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அடையாற்றின் கரையில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தீவிர புயலாக மாறியது மிக்ஜாம் : தீவிர புயலாக மாறிய மிக்ஜாம், சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது
அதி அதீவிர புயலாக மாறியது “மிக்ஜாம்”. இந்த புயலானது சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போதுதான் சென்னையில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது என்றும் தற்போதைய நிலை மேலும் தொடர்ந்து நீடிக்கும்போது, 2015-ம் ஆண்டை மிஞ்சுமா என்பதை பார்க்க வேண்டும் என வானியாளர்கள் தெரிவித்துள்ளனர். அடர்ந்த மேகங்கள் தொடர்ந்து சென்னைக்கு அருகே மேலடிக்கில் நீடிப்பதால், மழையானது தொடர்ந்து பெய்து வருவதாக தனியார் வானிலையாளர்கள் கணித்துள்ளனர். சென்னை வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த மழை இன்று இரவு வரை நீடிக்கும் என எச்சரித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் மழையில், அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ மழையும், மீனம்பாக்கம் 23 செ.மீ, அடையாறு பகுதியில் 23 செ.மீ, கோடம்பாக்கத்தில் 22 செ.மீ, சோழிங்கநல்லூரில் 21.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நேற்று இரவிலிருந்து தொடர்ந்து பெய்து வரும் மழை. இன்று இரவு வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை மட்டுமல்ல காற்றும் வீசும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த 12 மணி நேரத்தில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Cyclone Michaung : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3,162 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
25 பேர் கொண்ட மீட்புக்குழு, தாம்பரம், வேளச்சேரி பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிற
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு. வினாடிக்கு 8,881 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது
செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே உள்ள நேமம் ஏரி பிள்ளைப்பாக்கம் ஏரி, திருப்பெரும்புதூர் ஏரி நிரம்பி நீர்வரத்து அதிகரித்துள்ளது
ஏரியிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 162 கன அடி நீர் வெளியேற்றம். செம்பரம்பாக்கம், ஜமீன் கொரட்டூர் பகுதியில் கடந்த நான்கு மணி நேரத்தில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தாம்பரத்தில் உள்ள மீட்பு முகாம்களில் இதுவரை 697 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் வெள்ள நீர் அதிகம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை மீட்பது சிரமமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாம்பரம் வேளச்சேரிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை. சென்னையில் ஏற்கெனவே 4 குழுக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், மேலும் இரு குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து வருகை
பழவேற்காட்டில் காற்றின் வேகத்தினால் கரையோரம் நிருத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. படகுகளை மீட்க மீனவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகமாக பெருங்குடியில் 29 செ.மீட்டர் மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புழல் ஏரியில் இருந்து ஏற்கனவே 2000 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 3 ஆயிரம் கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு மிக்ஜாம் புயல் காரணமாக பெய்யும் கனமழையால் நீர்வரத்து 8 ஆயிரத்து 881 அடியாக உயர்ந்துள்ளது.
இதுவரை பெய்துள்ள மழையில் 10 சதவீதம் மட்டும்தான் கடலில் கலந்துள்ளது. மீதமுள்ள 90 சதவீதம் நீர் கடல் அலைகளின் சீற்றத்தினால் உள்வாங்காமல் உள்ளது.
சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ அளவுக்கு பதிவான மழை.. ஆவடியில் 28 செ.மீ அளவுக்கு பதிவானது மழையளவு
நீலாங்கரை பக்கிங்காய் கால்வாய் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியை அமைச்சர் மா.சுப்ரமணி பார்வையிட்டார்.
வேளச்சேரிக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை : கனமழை காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக தகவல்..
மாங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ள நீர். ரப்பர் படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்
பகல் ஒரு மணி வரை தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி, வேலூர்,திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா செல்லக்கூடிய புழல் சாலையில் 4 அடி தூரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் உள்ளே மழைநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பழவேற்காட்டில் உள்ள லைட் ஹவுஸ் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல் நீர் கிராமத்திற்குள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வருவதால் பலத்த காற்று வீசுகிறது - மணிக்கு 82 கிலோ மீட்டர் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. இதனால் 2 மணிநேரத்திற்கு தற்காலிகமாக விமானசேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் அதிதீவிர கனமழை பெய்து வருவதால் மாநகர பேருந்துகளி எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் 2600 பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்படும் நிலையில் இன்று 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் சமயத்தில் “தீவிர புயலாக” மாறும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது. வங்கக்கடலில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது மிக்ஜாம் புயல்
சென்னையில் மழை நின்ற பிறகு, கால்வாய்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும் - சென்னை மேயர் ப்ரியா
சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது. வங்கக்கடலில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மிகவும் சவாலான சூழலில் புறநகர் ரயிலகளை இயக்குவது மக்களுக்கு பாதுக்காப்பாக இருக்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம் பெருங்களத்தூர் சாலையில் நேற்று இரவு முதலை நடமாடியதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
மிக்ஜாம் புயல் எதிரொலி : நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் கூண்டு 2 ஏற்றப்பட்டுள்ளது
சென்னையில் மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு.
6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைப்பு.
புறப்படு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, இதுவரை 20 விமானங்கள் ரத்து.
சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல் : மேட்லி, ரங்கராஜபுரம், வியாசர்பாடி உட்பட சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது
மிக்ஜாம் புயல் விளைவு : மிக்ஜாம் புயல் விளைவுகள் காரணமாக தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இரவு 8.30 மணிவரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடல் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை - கடற்கரைக்கு செல்லும் சாலைகள் மூடல்
மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டை நெருங்கி வருவதால், கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு வேறு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் திங்கள் கிழமை (04.12.2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் 06.12.2023 (புதன் கிழமை) அன்றும், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு வரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய மற்றும் புறப்படவேண்டிய 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் நாளை பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கடந்த சிலமணி நேரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. புயல் தமிழ்நாட்டை நெருங்குவதால் மாமல்லபுரம் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது.
தமிழ்நாட்டினை மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை,மயிலாடுதுறை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7மணிக்குள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதால் சென்னை மெரினா உட்பட பல கடற்கரைகளில் அலைகள் மிகவும் சீற்றத்துடன் உள்ளது. பல அடி உயரங்களுக்கு அலைகள் எழும்புவதால் மக்கள் கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை உட்பட 15 இடங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் 15 மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிபேட், திருபத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு.
கனமழை பொறுத்தவரையில் இன்று சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் வேலூர் திருவண்ணாமலை கடலூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை முதல் மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலோர பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான புயல் தொடர்பாக சென்னை எழில்கத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், “ இன்று மாலை முதல் நாளை மாலை வரை கடற்கரை ஓரமாக புயல் நகரும் என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் இருகு 310 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம், பொதுப்பணி துறை, கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ,திருவண்ணாமலை ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1022 ஏரிகளில், 278 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, அதேபோன்று 76 சதவீதத்திலிருந்து 99 சதவீத நீரை எட்டியுள்ள ஏரிகளின் விவரம் 256 ஏரிகளாக உள்ளது. 51% இருந்து 75% 262 ஏரிகள் நிரம்பியுள்ளன 26 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் 181 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு 45 ஏரிகளும் நிரம்பியுள்ளன. 1022 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு உள்ளது
சென்னை கோடம்பாக்கம் பராங்குசபுரம் பகுதியில் மழை பாதிப்புகளையும், மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைகால சிறப்பு மருத்துவ முகாமையும், அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய அமைச்சர், “ அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு கூட செல்லவில்லை. அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். 925 மோட்டர்கள், உணவு, மரம் விழுந்தால் எடுக்கவும் தயார் நிலையில் உள்ளோம். அடைப்பு ஏற்பட்டு நிற்கும் தண்ணீரை மோட்டர் கொண்டு எடுக்கிறோம்.. முகத்துவாரத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான புயல் வட கடலோர தமிழகத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை புயல் நெருங்கும் நிலையில் இன்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) 13, தென்காசி (தென்காசி மாவட்டம்) 11, ஆலந்தூர் (சென்னை மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) தலா 10, திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்), வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் உருவாகியுள்ள நிலையில் நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிப்பேட், வேலூர், திருபத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விடுமுறை தினம் என்பதால் கடல் அலைகளை ரசித்தவாறு செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோரப்பகுதிகள் : நாளை (03.12.2023) மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் 04.12.2023 மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள்: 03.12.2023 மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 04.12.2023 மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வட ஆந்திர கடலோரப் பகுதிகள்:
04.12.2023 மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 05.12.2023 மாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மிக்ஜாம் புயல் காரணமாக தரைக்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.12.2023: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சியர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தனியாக தொடர்புக் கொண்டு மிக்ஜாம் புயல் எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் இருவான மிக்ஜாம் புயல் காரணமாக 5 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் கூன்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, பாம்பன், காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் இருந்து 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் செல்ல இருந்த 2 விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வர இருந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Background
Cyclone Michaung LIVE Updates:
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் அதிகனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மின்சார ரயில்கள், மிகவும் மோசமான வானிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு.
6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைப்பு. புறப்படு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, இதுவரை 20 விமானங்கள் ரத்து. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12, மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதம்.
மீனம்பாக்கத்தில் 82 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசி வருவதால் காலை 10 மணி முதல் 2 மணி நேரத்திற்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேநிலை தொடர்ந்தால் விமான சேவை ரத்து செய்யப்படும் நேரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இன்று சென்னைக்கு அபுதாபி 2 விமானங்கள், துபாய் 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பை மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதைப்போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, விஜயவாடா, ராஜமுந்திரி, கோவை, திருச்சி, கொச்சி உள்ளிட்ட 10 புறப்பாடு விமானங்கள், மற்றும் அதே இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 10 விமானங்கள், ஆகிய 20 விமானங்கள் இன்று இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தவிர துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, உட்பட 14 புறப்பாடு விமானங்கள், லண்டன், கோலாலம்பூர், சார்ஜா, துபாய், மும்பை, டெல்லி உள்ளிட்ட 12 வருகை விமானங்கள், மொத்தம் 26 விமானங்கள் இதுவரை பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்கள் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.
இதை அடுத்து விமான பயணிகள் அனைவரும் அந்தந்த விமானம் நிறுவனங்களின், இணையதளங்களில் தொடர்பு கொண்டு விமானங்களின் புறப்பாடு வருகை குறித்து, பயணிகள் தெரிந்து கொண்டு, அதன்பின்பு விமான நிலையத்திற்கு வந்தால் போதும். மேலும் அவசியமான பயணம் என்றால் மட்டும், இன்று விமானப்பயணம் மேற்கொள்ளலாம். இல்லை என்றால், இன்று விமான பயணத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விமான நிலையத்தில் வேகமாக காற்று வீசி வருவதாலும் விமான ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதாலும் 68 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -