நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் திரையிடப்பட்டபோது, ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்த ரசிகர்கள்
முன்னதாக சல்மான் கானின் டைகர் 3 திரையிடப்பட்ட போதும் ரசிகர்கள் அங்கு பட்டாசு வெடித்த இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. மேலும் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இது பற்றி சல்மான்கான் கூறியதாவது: “டைகர் 3 படத்தின் போது திரையரங்குகளுக்குள் பட்டாசு வெடிப்பதைப் பற்றி கேள்விப்படுகிறேன். இந்த நபர்களின் செயல்களை தான் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. இது ஆபத்தானது. நம்மையும் மற்றவர்களையும் ஆபத்தில் வைக்காமல் படத்தை ரசிப்போம். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருந்தார்.
வீடியோவிற்கு இணையத்தில் எதிர்ப்பு
இந்நிலையில், ரன்பீர் ரசிகர்கள் பட்டாசு வெடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இது குறித்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட்டில், "சல்மான் கான் ரசிகர்களின் லோ பட்ஜெட் வடிவம் தான் ரன்பீர் ரசிகர்கள்" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "ரன்பீர் கதாப்பாத்திரத்தின் பார்வையில் பார்த்தால் படம் நன்றாகக் கூட இல்லை. பின் எதை கொண்டாடுகின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.
அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. அனிமல் படத்தில் ரன்பீர் லீட் ரோலில் நடித்துள்ளார். இருந்தபோதிலும் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் தான் முக்கியத்துவம் பெற்றுள்ளன.