கரூரில் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி ஐயப்பனை வழிபட்டுச் சென்றனர்.



கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க குருமார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி எனும் ஆழி திருவிழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அருள் அழைத்து நெய் விளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி  விமர்சையாக நடைபெற்றது.




ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில்  ஐயப்பன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் ஆண்கள், பெண், ஆண் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பூக்குழியில் இறங்கி, ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். இதனை காண அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களும் சாமி தரிசனம் செய்து சென்றனர்.




Join Us on Telegram: https://t.me/abpdesamofficial