Mizoram Election Result 2023 LIVE: ஆட்சியைப் பிடித்தது ஜோரம் மக்கள் இயக்கம்; 21 இடங்களில் வெற்றி; 6 இடங்களில் முன்னிலை
Assembly Election Results 2023 LIVE Updates(தேர்தல் முடிவுகள் 2023): மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கான மாநில தேர்தல் முடிவுகளின் லைவ் அப்டேட்களை, உடனுக்குடன் அறிய இணைந்திருங்கள்.
மிசோரத்தில், ஜோரம் மக்கள் இயக்கம் 20 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மேலும் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜோரம் மக்கள் இயக்கம் இதுவரை 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் நண்பகல் 1 மணி நிலவரப்படி ஜோரம் மக்கள் இயக்கம் 16 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் 11 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. பாஜக இரண்டு இடத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றது. அதேபோல் ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணி மூன்று இடத்தில் வெற்றியும் 7 இடங்களில் முன்னிலையும் வகிக்கின்றது.
மிசோரத்தில் பாஜக ஒரு இடத்தில் வெற்றியும் ஒரு இடத்தில் முன்னிலையிலும் உள்ளது. பாஜக பலக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
ஜோரம் மக்கள் இயக்கம் தற்போதைய நிலவரப்படி 26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. மேலும் இந்த கட்சி ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள மிசோரம் தேசிய இயக்கம் 13 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
பரபரப்பாக நடைபெற்று வரும் மிசோரம் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி 24 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் முன்னிலை வகிக்கின்றது. இந்த கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஜோரம் மக்கள் இயக்கம் தற்போதைய நிலவரப்படி 18 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
மிசோரமில் தற்போதைய நிலவரப்படி பாஜக ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
மிசோரத்தில் தற்போது 10 இடங்களில் மிசோரம் தேசிய கட்சி 10 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மிசோரம் சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
3 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் பாஜக தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "2024ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்" என்றார்.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை அடுத்து, முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், டெல்லி கட்சி ஆலவலகதத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். இதன்பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "இன்று வரலாறு காணாத அளவில் வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 100க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை அடுத்து, முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் வழங்கினார்.
பாஜக வெற்றி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”சாதி அரசியலின் நாட்கள் முடிந்துவிட்டன என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மக்கள் வழங்கிய இந்த மகத்தான ஆதரவிற்கு தலைவணங்குகிறேன். பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்" என்றார்.
சட்டசபை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் வேறு வேறானவை. சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. தற்போதைய சூழலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. யார் சிறப்பாக செயல்பட்டாலும், அவர்களை நாம் வாழ்த்த வேண்டும். தற்போதைய சூழல் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சூலே.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால், பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சினிகுமாரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், ”தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்து தரப்பு மக்களும் வளமுடன் திகழ, வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துகள்" என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். காங்கிரசுக்கு வாக்களித்துள்ள தெலுங்கானா மக்களுக்கு நன்றி. கொள்கை ரீதியான காங்கிரஸின் போர் தொடரும். தெலுங்கானாவில் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்விட்டர் பதிவில், "தெலங்கானாவில் வாக்களித்த அனைத்து மக்களுக்கு நன்றி. அதேபோல, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் ஏமாற்றம் அளித்தது. எனவே, தற்காலிக பின்னடைவுகளை சமாளித்து, I.N.D.I.A கூட்டணியுடன் இணைந்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையாக தயாராகுவோம்" என்றார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.எல்.ஏ கவிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் தெலுங்கானா மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவோம்” என்றார்.
பிஆர்எஸ்ஸை தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய தெலங்கானா மக்களுக்கு நன்றி. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இன்றைய முடிவைப் பற்றி வருத்தப்படவில்லை. ஆனால் ஏமாற்றம் அளித்தது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த தோல்வியை பாடமாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பிஆர்எஸ் கட்சி மாநிலத்தில் எழும் என்று கே.டி.ராம்ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கான மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிற்பகல் 1 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான காந்தி பவனுக்கு மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி செல்கிறார். அங்கு தொண்டர்களுடன் சேர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், டிஜிபி அன்ஜனி குமார், சட்ட - ஒழுங்கு ஏடிஜிபி சஞ்சய் ஜெயின் மற்றும் சிஐடி பிரிவு ஏடிஜிபி மகேஷ் பகவத் ஆகியோரும், ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் பாஜக 113 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 71 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்டிபி) 2 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி 2 இடங்களிலும், ஆர்எல்டி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் கட்சித் தலைவர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணித்தார்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்து முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி மற்றும் மாநிலக் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ள போஸ்டரில் காங்கிரஸ் தொண்டர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் வருகின்ற டிசம்பர் 6ம்தேதி நடைபெறும் என்று கார்கே அறிவித்துள்ளார். ஏற்கனவே, 3 சுற்று கூட்டங்கள் முடிந்த நிலையில் அடுத்த சுற்று கூட்டம் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் முன்னிலை பெறும் என தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 67 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங், சத்தீஸ்கர் மாநில மக்கள் பூபேஷ் பாகேலை நிராகரித்ததாகவும், மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். சத்தீஸ்கரில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, "நாங்கள் அனைவரும் தொழிலாளர்கள், எங்களுக்கு என்ன பொறுப்பைக் கொடுத்தாலும் செய்வோம்" என்று அவர் கூறினார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் போட்டியிட்ட காமாரெட்டி தொகுதியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி 3,607 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் வெங்கடரமண ரெட்டி 2,717 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார். முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதல்சுற்று முடிவில் 2,095 வாக்குகள் மட்டுமே கிடைத்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
சத்தீஸ்கரின் நிலவரப்படி, பாஜக 50 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, சத்தீஸ்கரில் பாஜக 46 இடங்களில் முன்னிலை பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் 37 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மோடி அலை வீசி வருகிறது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக 117 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும், மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
தெலுங்கானாவில் 52 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அக்கட்சியின் மாநிலப் பிரிவு அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்த சத்தீஸ்கரில் பாஜக பெரும்பான்மையை தாண்டியுள்ளது.
சத்தீஸ்கரில் திடீர் திருப்பமாக காங்கிரஸை முந்தி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 10.36 நிலவரத்தின்படி, 40 இடங்களிலும், பாஜக 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. பிஆர்எஸ் 29 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
சத்தீஸ்கரின் பதான் சட்டசபை தொகுதியில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் உள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 65 இடங்களிலும், பிஆர்எஸ் 46 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அலுவலத்தின் முன்பு தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 6:30 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ல நிலையில், மாலை 5 மணிக்கு கொண்டாட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
காலை 10:00 மணி
மத்தியப் பிரதேசம்:
- பாஜக - 151
- காங்கிரஸ் - 77
- பகுஜன் - 00
- மற்றவை - 02
தெலங்கானா:
- காங்கிரஸ் - 68
- பிஆர்எஸ் - 39
- பாஜக - 08
- மற்ற-04
ராஜஸ்தான்:
- பாஜக-103
- காங்-81
- பகுஜன்-00
- மற்ற-15
சத்தீஸ்கர்:
- காங்-52
- பாஜக-38
- ஜெசிசி-00
- மற்ற-00
மத்தியப் பிரதேசத்தின் தற்போதைய நிலவரப்படி, பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிகிறது. பாஜக 150 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 79 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
ராஜஸ்தானில் பாஜக 125 இடங்களில் முன்னிலை உள்ளது. காங்கிரஸ் 62 இடங்களிலும், மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ராஜஸ்தானில் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் 1173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட காமாரெட்டி, காஜ்வெல் ஆகிய 2 தொகுதிகளிலும் பின்னடைவு. காமாரெட்டி தொகுதியில் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி முன்னிலை.
தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, மத்திய பிரதேசத்தில் பாஜக 148 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாரத் மாதா கி ஜெய், ஜனதா ஜனார்தன் கி ஜெய் என்று ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரவுள்ளன. மக்களின் ஆசியிலும், மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையிலும் பாரதிய ஜனதா கட்சி முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன். பாஜகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரசுக்கு 96 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களிலும், BRS 46 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், AIMIM 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம், தெலங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
ராஜஸ்தானில் பாஜக 105 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் 80 இடங்களிலும் மற்றவை 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
காலை 9:15 மணி
மத்தியப் பிரதேசம்:
- பாஜக - 124
- காங்கிரஸ் - 94
- பகுஜன் - 00
- மற்றவை - 01
தெலங்கானா:
- காங்கிரஸ் - 62
- பிஆர்எஸ் - 36
- பாஜக - 05
- மற்ற-06
ராஜஸ்தான்:
- பாஜக-104
- காங்-86
- பகுஜன்-00
- மற்ற-05
சத்தீஸ்கர்:
- காங்-44
- பாஜக-41
- ஜெசிசி-00
- மற்ற-01
ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த் தேவ்ஜி கோவிலில் பாஜக எம்பியும், வித்யாதர் நகர் வேட்பாளருமான தியா குமாரி பிரார்த்தனை செய்தார்.
சத்தீஸ்கரின் 78 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் 46 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேசமயம் மற்ற ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளில் நிலவரங்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் 66 இடங்களிலும், பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் 209 சட்டமன்றத் தொகுதிகள் மீதான நிலவரங்கள் வெளியான நிலையில் பாஜக 117 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
நேரம் : காலை 09:00 மணி
ராஜஸ்தான்:
- காங்கிரஸ் - 50
- பாஜக - 60
- மற்றவை - 14
தெலங்கானா:
- காங்கிரஸ் - 51
- பி ஆர் எஸ் - 30
- பாஜக - 2
- AIMIM - 5
சத்தீஸ்கர்:
- காங்கிரஸ் -36
- பாஜக - 32
- மற்றவை - 00
மத்திய பிரதேசம்:
- காங்கிரஸ் - 60
- பாஜக - 75
- மற்றவை - 03
மத்தியப் பிரதேசத்தின் 184 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில் பாஜக 95 இடங்களிலும், காங்கிரஸ் 87 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்றவர்கள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
ராஜஸ்தானின் 199 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில் பாஜக 101 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
சத்தீஸ்கரின் 71 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் 46 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
கஜ்வெல் மற்றும் காமா ரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தெலங்கானாவில் 103 இடங்களுக்கான நிலவரம் வெளியான நிலையில், காங்கிரஸ் 60 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. BRS 33 இடங்களிலும், AIMIM 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதே நேரத்தில் பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தெலங்கானா, சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல், ம.பி., ராஜஸ்தானில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் 147 இடங்களின் நிலவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் பாஜக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 65 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தெலுங்கானா மக்களின் ஆசியுடன் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் மகள் கவிதா பேட்டியளித்துள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், மற்ற 3 மாநிலங்களில் காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் இழுபறி இருந்து வருகிறது.
தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நேரம் : காலை 08:30 மணி
ராஜஸ்தான் :
- காங்கிரஸ் - 15
- பாஜக - 38
- மற்றவை - 00
தெலங்கானா:
- காங்கிரஸ் - 15
- பி ஆர் எஸ் - 11
- பாஜக - 01
- மற்றவை - 01
சத்தீஸ்கர்:
- காங்கிரஸ் - 19
- பாஜக - 15
- மற்றவை - 00
மத்திய பிரதேசம்:
- காங்கிரஸ் - 23
- பாஜக - 21
- மற்றவை - 00
ராஜஸ்தானில் 109 இடங்களுக்கான நிலவரங்கள் வெளியான நிலையில், பாஜக 57 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 6 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
ராஜஸ்தானின் டோங்க் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸின் சச்சின் பைலட்டும், சர்தார்புரா தொகுதியில் அசோக் கெலாட்டும் முன்னிலையில் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் 101 இடங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியான நிலையில் பாஜக 50 இடங்களிலும், காங்கிரஸ் 49 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
சத்தீஸ்கரின் ஆரம்ப நிலைகளின் விவரங்களின்படி, காங்கிரஸ் முன்னிலை பெறுகிறது. அதன்படி காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
தெலங்கானாவில் 59 இடங்களுக்கான நிலவரம் வெளியான நிலையில் காங்கிரஸ் 38 இடங்களிலும், ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ். 16 இடங்களிலும் முன்னிலை உள்ளது.
ராஜஸ்தானில் 89 இடங்களுக்கான நிலவரம் வெளியான நிலையில், பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
சத்தீஸ்கரில் 38 இடங்களின் முன்னிலை நிலவரம் - காங்கிரஸ் 20 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது பாஜக 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தெலங்கானாவில் தபால் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய மூன்று தலைவர்களை தெலங்கானா செல்லுமாறு காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சுஷில் குமார் ஷிங்கே, ப சிதம்பரம், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் ஹைதராபாத் செல்ல தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, சர்குஜாவில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையை வாக்கு எண்ணும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஜோத்பூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி நேற்று மாலை 5 மணிக்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைமையுடன் ஜூம் மீட்டிங்கில் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதன்பிறகு டி.கே.சிவக்குமார் தெலங்கானாவின் காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளர்களாக நியமித்தது.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரளாவை சேர்ந்த ரமேஷ் சென்னிதலா, தீபதாஸ் முன்ஷி, கர்நாடக அமைச்சர் கேஜே ஜார்ஜ், போசராஜு என மொத்தமாக 5 பேரும் ஹைதராபாத் வந்தடைந்தனர்.
ELECTION RESULTS 2023: மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கான மாநில தேர்தல் ஆனது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
ELECTION RESULTS 2023: ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும், தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவிற்கு பிறகு வெளியான கருத்து கணிப்பில், சத்தீஸ்கரை தவிர மற்ற 3 மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TELANGANA ELECTION RESULTS 2023: 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறார். அதேநேரம், காங்கிரஸ் முதல்முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
CHATTISGARH ELECTION RESULTS 2023: 90 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
MADHYA PRADESH ELECTION RESULTS 2023: 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 20 ஆண்டுகளாகவே அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
RAJASTHAN ELECTION RESULTS 2023: 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் கடந்த 25ம் தேதி 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 20 ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ELECTION RESULTS 2023: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன.
Background
Assembly Election Results 2023 LIVE Updates | தேர்தல் முடிவுகள் 2023
Mizoram Election Results: 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கிடையில் மிசோரம் மக்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக தேவாலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி மிசோரம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கியதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்காக 13 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் காலை 8.30 மணிக்கு தபால் ஓட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதை தொடர்ந்து மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. 40 தொகுதிகள்தான் என்பதால் முடிவுகள் மதியத்திற்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிசோரத்தில் ஆட்சியைப் பிடிக்க மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். நேற்றைய வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ராஜஸ்தானில் உள்ள 119 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் வசம் இருந்தது. அதேபோல் காங்கிரஸ் 69 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -