மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயிலில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.




தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.


சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.


Gandhi Jayanti 2023: காந்தியின் 154வது பிறந்தநாள்: நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!




இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 24 -ம் தேதி வெகு விமரிசையாக ஹெலிகாப்டர் மூலம் விமான கலசங்களுக்கு மலர் தூவப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வருகை புரிந்தார்.


Morning Headlines: மகாத்மா காந்தி பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை... இன்றைய முக்கியச் செய்திகள்!




அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற செந்தாமரை, பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டநாதர், அஷ்ட பைரவர் சன்னதிகள்,  திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு சிவாச்சாரியார்கள் கோயில் பிரசாதங்களை வழங்கினர்.


TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்னும் மழை இருக்கா? வானிலை எப்படி இருக்கும்? - ஆய்வாளர்கள் சொல்வது என்ன?