காந்தி ஜெயந்தி - தலைவர்கள் மரியாதை..!


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு,  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் வாசிக்க..


மக்களின் உரிமைக்குரல்.. அகிம்சையின் அடையாளம்.


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது தான் காந்தியடிகளின் உண்மையான பெயர். இவர்  குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாயாரின் பெயர் புத்திலிபாய் என்பதாகும். குடும்பத்தின் கடைக்குட்டியாக பிறந்த காந்திக்கு  இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். அவர் தனது 13 வயதிலேயே சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட கஸ்தூரி பாயை மணந்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் பிறந்தனர். மேலும் வாசிக்க..


திருச்சி - வியட்நாம் விமான சேவை


வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக திகழும் வியட்ஜெட் விமான நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில் வரும் நவம்பர் 2 முதல் திருச்சி -வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டி - திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் வாசிக்க..


“மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்”


மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த அரசு  மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. மேலும் கிராமங்களில் தான் இந்தியா  வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் ....மேலும் வாசிக்க..


41 புறநகர் ரயில்கள் ரத்து


சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலுள்ள  வழிதடத்தில் இன்று பொறியியல்  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,  அதனை முன்னிட்டு 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடம்பாக்கம், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 11 மணி முதல் 3:15 மணி வரை நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விடுமுறை தினம் என்பதால் சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை ரயில்வே மார்க்கத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டம் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..


விஸ்வகர்மா யோஜனா திட்டம்


பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு விஸ்வகர்மா திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய வானதி சீனிவாசன், இத்திட்டத்தின் கீழ் கோவை தெற்கு தொகுதியில் அதிக அளவில் உள்ள விஸ்வகர்மா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். மேலும் வாசிக்க..


மகாத்மாவின் பொன்மொழிகள்


இந்தியாவின் தேச தந்தை என்று போற்றப்படும் மகாத்மாக காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படும். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுபவரின் சிந்தனைகள், அவர் வாழ்வியல் அனுபவங்கள், எளிமையான வாழ்வியல் முறை இன்றளவும் நல்ல பாடமாக உள்ளது.  மேலும் வாசிக்க..


சத்தீஸ்கரில் மம்தா பார்முலாவை கையில் எடுத்த காங்கிரஸ்..


சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.மேலும் வாசிக்க..