மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.




இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.


TMC for Rahul Gandhi: எதிர்க்கட்சிகளை இணைக்கும் ராகுல் விவகாரம்.. கங்கிரஸுடன் கை கோர்த்த திரிணாமுல் காங்கிரஸ்.. மத்திய அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!




தற்போது  சட்டைநாதர் கோயிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சீர்காழியில் அமைந்துள்ள சட்டை நாதர் தேவஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.


RSS Rally Case: ஒரே நாளில் 50 இடங்களில் பேரணி... ஆர்.எஸ்.எஸ்க்கு அனுமதி தர முடியாது: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்




இவ்லவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு இரயில்கள் இயக்கம் வேண்டும். குடமுழுக்கு நடைபெறும் நாள் அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். கோடைக்காலம் என்பதால் வரும் பக்தர்களுக்கு அதிக இடங்களில் குடிநீர் வசதி கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் என்று சீர்காழியில் பல்வேறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், பக்தர்களும் அரசுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Bank Holidays: ஏப்ரல் மாத்ததில் வங்கி செல்ல திட்டமா? 15 நாட்கள் விடுமுறை: லிஸ்ட் பாத்துட்டு போங்க..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண