வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் பல விஷேச நாட்கள் வருவதால் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பல்வேறு நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளும் வார இறுதி நாட்கள் உட்பட ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு செல்லும் திட்டம் இருந்தால் விடுமுறை நாட்களை சரிபார்த்து செல்ல அறிவுருத்தப்படுகிறார்கள்.
வழக்கமாக எல்லா மாதத்திலும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செய்லபடும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகும். ஏப்ரல் மாதத்தில் வரும் புனித வெள்ளி, மஹவீர் ஜெயந்தி, ரமலான் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளையடுத்து அந்ததந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதேபோல் ஏப்ரல் 1ஆம் தேதி நிதியாண்டு இறுதி என்பதால் அன்று வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில் வரும் விடுமுறை நாட்களில் வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இணைய வழி வங்கி செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விடுமுறை என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வங்கி விடுமுறை நாட்களைப் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் பார்ப்பது அவசியம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் மாத்ததில் வரும் விடுமுறை நாட்கள்:
ஏப்ரல் 1: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் நிதிஆண்டு இறுதி வேலைகளை மேற்கொள்ள இருப்பதால் அன்று வங்கிகள் செயல்படாது. இதில் முந்தைய நிதியாண்டின் கணக்குகள், இருப்புநிலைகள் மற்றும் பிற நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை அடங்கும்.
ஏப்ரல் 4: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்.
ஏப்ரல் 7: புனித வெள்ளி
ஏப்ரல் 8: இரண்டாம் சனிக்கிழமை
ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/போஹாக் பிஹு/சீராபா/வைசாகி/பைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/மஹா பிசுபா சங்கராந்தி/பிஜு விழா/புய்சு விழா
ஏப்ரல் 15: விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம்
ஏப்ரல் 18: ஷப்-ல்-கதர்
ஏப்ரல் 21: கரியா பூஜை/ஜுமாத்-உல்-விடா
ஏப்ரல் 22: ரம்ஜான் பண்டிகை/ இரண்டாம் சனிக்கிழமை