மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான வேயுறுதோழியம்மை சமேத சோமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  இறைவன் சுயம்புவாக அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தில்  முதல் யுகத்தில் இந்திரனும், இரண்டாம் யுகத்தில் சூரியனும், மூன்றாம் யுகத்தில் பத்தரகாளியும், நான்காம் யுகத்தில் நண்டும் பூசித்த சிறப்புக்குரிய தலமாக விளங்குகிறது.




சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று இக்கோயிலைச் சுற்றியுள்ள கிராமக் கோயில்களான வரசித்தி விநாயகர், படைவெட்டி மாரியம்மன், பூரணபுஷ்கலாம்பிகா சமேத ஐயனார், ராமர் பஜனை மடம், மாணிக்க நாச்சியார், ஒழுகைமங்கல மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் ஆகிய 7 உப கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


பதற்றம்..காலிஸ்தானுக்கு ஆதரவாக போராட்டம்..கனடா தூதருக்கு இந்தியா சம்மன்..விஸ்வரூபம் எடுத்த அம்ரித் பால் சிங் விவகாரம்..!




முன்னதாக சிவனடியார் ஊர்வலத்துடன், யானை, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கள சின்னங்கள் முன்செல்ல யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Anbumani Ramadoss : ஆன்லைன் ரம்மி தடை சட்டம்.. ஆளுநர் நிறுவனங்களுக்கு சாதகமா? அன்புமணி ராமதாஸ்











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண