விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றதில் திராள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர்.


விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டப்படும். அந்த வகையில் இந்த வருட பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 5 ஆம் நடைபெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வினை முன்னிட்டு வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  


மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம்  சிவஞான பாலய சுவாமிகள் கொடியேற்றி பங்குனி உத்திர திருவிழாவை துவக்கி வைத்தார். இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்  இதனை தொடர்ந்து ஏப்ரல் 4-ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறும், இந்த உத்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்வில் மயிலத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.