பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை :
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.
Panguni Uthiram: "சிவன் முதல் முருகன் வரை" - பங்குனி உத்திரம் நன்னாளில் நடந்த தெய்வ திருமணங்கள்!
அவ்வாறு பக்தர்கள் செலுத்த உண்டியல் காணிக்கை நிரம்பியவுடன் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உண்டியலில் எண்ணிக்கை நடைபெறும். அப்படி உண்டியலில் எண்ணிக்கை நடைபெறும்போது தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கோயில் லாக்கரில் வைத்து பாதுகாத்து வருவார்கள்.
தங்கம் அளவீடு :
அப்படி 16 ஆண்டுகள் லாக்கரில் வைக்கப்பட்ட தங்கத்தை சுமார் 22 கிலோவுக்கு மேல் உள்ள தங்கத்தை சுத்த தங்கமாக பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி மாலா தலைமையில் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர் உறுப்பினர் முன்னிலையில் கடந்த 16 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 202 கிலோ தங்கம் அதில் இருக்கும் கற்கள், அறக்கு, அழுக்கு நீக்கி சுத்த தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியானது 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த பணியானது இன்னும் 15 நாட்களுக்கு மேல் நடைபெறும் எனவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தப் பணியை வீடியோ பதிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தங்கத்தை மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலையில் தங்கத்தை அனுப்பி கட்டிகளாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்தனர்.