மக்களவை தேர்தலுக்கான தேதி எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை அதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்ற மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. 

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்:

ஆளும் கட்சியான தி.மு.க. ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க. கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்கள் பட்டியலையை நேற்று வெளியிட்டது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. அதனை தொடர்ந்து, தே.மு.தி.க. கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து 5 தொகுதிகளை ஒதுக்கியது. நேற்று காலை 10 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றும் மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். 

நேரடி மோதல்:

இந்தநிலையில், தி.மு.க. சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை மற்றும் 21 வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதே நேரத்தில், அ.தி.மு.க. சார்பிலும் இன்று முழு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்ட நிலையில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேரடியாக எந்தெந்த தொகுதிகள் மோதுகின்றது என்பதை இங்கே பார்க்கலாம்.. 

தொகுதி திமுக வேட்பாளர்  அதிமுக வேட்பாளர்
வட சென்னை  கலாநிதி வீராசாமி இராயபுரம் ஆர். மனோ
தென் சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) ஜி. செல்வம் ராஜசேகர்
அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஏ.எல். விஜயன்
தேனி தங்க தமிழ்செல்வன் நாராயணசாமி
ஈரோடு பிரகாஷ் ஆற்றல் அசோக்குமார்
சேலம் செல்வகணபதி  விக்னேஷ்
ஆரணி  தரணிவேந்தன் கஜேந்திரன்
நீலகிரி  ஆ.ராசா லோகேஷ் தமிழ்ச்செல்வன்
தருமபுரி  ஆ.மணி அசோகன்
கோயம்புத்தூர் கணபதி ராஜ்குமார் சிங்கை ராமச்சந்திரன்
பெரம்பலூர் அருண் நேரு சந்திரமோகன்

பொள்ளாச்சி

ஈஸ்வரசாமி கார்த்திகேயன்

தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி சிவசாமி வேலுமணி

ஸ்ரீபெரும்புதூர்

டி.ஆர். பாலு பிரேம் குமார்

வேலூர் 

கதிர் ஆனந்த் பசுபதி

திருவண்ணாமலை

அண்ணாதுரை கலிய பெருமாள்

கள்ளக்குறிச்சி

மலையரசன் குமரகுரு

ஆகிய 18 தொகுதிகளில் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. 

திமுக சார்பில் போட்டியிடும் முழு வேட்பாளர்கள் பட்டியல்: 

  1. தூத்துக்குடி- கனிமொழி
  2. தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்
  3. வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி
  4. தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
  5. மத்தியசென்னை- தயாநிதி மாறன்
  6. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
  7. காஞ்சிபுரம் - ஜி.செல்வம்
  8. அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்
  9. திருவண்ணாமலை- அண்ணாதுரை
  10. தர்மபுரி- ஆ.மணி
  11. ஆரணி-தரணிவேந்தன்
  12. வேலூர்- கதிர் ஆனந்த்
  13. கள்ளக்குறிச்சி- மலையரசன்
  14. சேலம்-செல்வகணபதி
  15. கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்
  16. பெரம்பலூர் - அருண் நேரு
  17. நீலகிரி - ஆ.ராசா
  18. பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி
  19. தஞ்சாவூர் - முரசொலி
  20. ஈரோடு-பிரகாஷ்
  21. தேனி- தங்க தமிழ்செல்வன்

 நேற்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட 16 வேட்பாளர்கள் பட்டியல்: 

  • வடசென்னை - இராயபுரம் மனோ
  • தென் சென்னை - ஜெயவர்தன்
  • காஞ்சிபுரம் - ராஜசேகர்
  • அரக்கோணம் - விஜயன்
  • விழுப்புரம் - பாக்கியராஜ்
  • சிதம்பரம் - சந்திரஹாசன்
  • நாமக்கல் - தமிழ்மணி
  • கரூர் - கே.ஆர்.என். தங்கவேல்
  • சேலம் - விக்னேஷ்
  • மதுரை - சரவணன்
  • தேனி - நாராயணசாமி
  • கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
  • ஆரணி - கஜேந்திரன் 
  • நாகப்பட்டிணம் - சுர்ஜித் சங்கர்
  • ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
  • இராமநாதபுரம் - ஜெயபெருமாள்

இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்:

வேட்பாளர்கள் தொகுதி
 பிரேம் குமார் ஸ்ரீபெரும்புதூர்
பசுபதி  வேலூர் 
அருணாச்சலம் திருப்பூர்
லோகேஷ் தமிழ்ச்செல்வன் நீலகிரி 
சிங்கை ராமச்சந்திரன் கோவை
சிம்லா முத்துச்சோழன் நெல்லை
கருப்பையா திருச்சி 
சந்திரமோகன் பெரம்பலூர்
குமரகுரு கள்ளக்குறிச்சி
அசோகன் தருமபுரி
தமிழ் வேந்தன் புதுச்சேரி 
கலியபெருமாள்  திருவண்ணாமலை 
பாபு  மயிலாடுதுறை
சேகர்தாஸ்  சிவகங்கை 
கார்த்திகேயன் பொள்ளாச்சி 
சிவசாமி வேலுமணி  தூத்துக்குடி 
பசுலியான் நசரேத் கன்னியாகுமரி