திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. வெளி மாநிலம் , வெளி மாவட்டங்களிலிருந்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷம், முகூர்த்தம் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி நேற்று ஆவனி 1ம் நாள் அதாவது ஆடி முடிந்த நிலையில் நேற்று முகூர்த்த நாளாகும் அதேபோல் வார விடுமுறை என்பதாலும் இதனால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.


NEET Exam: எழும் கடும் எதிர்ப்பு.. மறுபுறம் நீட் தேர்வுக்கு குவியும் விண்ணப்பங்கள், தேசிய அளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில்?



குறிப்பாக பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய காலை முதலே பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வைத்து ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி கோவிலில் மணமக்கள் கூட்டமும் அலைமோதியது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 150 திருமணங்கள் திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


OPS Condemns EPS: 'தொண்டர்களுக்கு சோறு போடாத ஈ.பி.எஸ், மதுரை மாநாடு தோல்வி..' : ஓபிஎஸ் கடும் கண்டனம்



திருஆவினன்குடி கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை அடிவாரம், அய்யம்புள்ளி சாலையோர பகுதியில் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அடிவாரம் போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அதன் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே நேற்று பழனிக்கு வந்த பக்தர்கள் மின்இழுவை ரெயில்கள் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல திரண்டனர். இதனால் அங்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  டிக்கெட் எடுக்கும் கவுண்ட்டரை கடந்து கிரிவீதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோவிலில் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Messi Record: அண்ணா வரார் வழி விடு..! கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை.. 44 சாம்பியன் பட்டங்கள்..