கால்பந்தாட்ட உலகில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களின் பட்டியலில் மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.


மெஸ்ஸி:


அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவருமான மெஸ்ஸி, தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான இண்டர் மியாமியில் இணைந்து விளையாடி வருகிறார். கால்பந்தாட்ட போட்டிகளில் களம் இறங்கியது முதலே கிளப் போட்டிகள் இருந்து சர்வதேச போட்டிகள் வரை அனைத்திலும், தொடர்ந்து அசத்தி வருகிறார். பல்வேறு விதமான தொடர்களில் விளையாடியதோடு, கேப்டனாக செயல்பட்டு ஏராளமான கோப்பைகளையும் வென்றுள்ளார். அந்த வகையில் தான், மேஜர் லீக் சாக்கர் தொடரில் இண்டர் மியாமி அணிக்காக களமிறங்கிய முதல் தொடரிலேயே கோப்பயை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் கால்பந்தாட்ட உலகில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 


அதிக சாம்பியன் பட்டம் வென்ற வீரர்:


மேஜர் லீக் சாக்கர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கால்பந்தாட்ட உலகில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதன்படி லீக் சாம்பியன்ஷிப் தொடங்கி உலகக்கோப்பை வரை மொத்தம் 44 பட்டங்களை வென்றுள்ளார். 43 கோப்பைகள் உடன் தன்னுடன் முதலிடத்தை பகிர்ந்து இருந்த பிரேசில் வீரல் டேனி ஆல்வ்ஸை பின்னுக்கு தள்ளி, மெஸ்ஸி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.


மெஸ்ஸி வென்ற பட்டங்கள் என்ன?


மெஸ்ஸி வென்ற 44 சாம்பியன்ஷிப்களில் அர்ஜெண்டினாவிற்காக, உலகக்கோப்பை உள்ளிட்ட 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு, கிளப் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக லா லீகா மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட 35 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அந்த வரிசையில் தான் புதியதாக மேஜர் லீக் சாக்கர் சாம்பியன் பட்டமும் இணைந்துள்ளது.


அதிக சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள்:



  • மெஸ்ஸி                                     - அர்ஜெண்டினா       -  44 சாம்பியன் பட்டங்கள்

  • டேனி ஆல்வ்ஸ்                        -    பிரேசில்                   -  43 சாம்பியன் பட்டங்கள்

  • ஹோசம் அஷூர்                    - எகிப்து                        - 39 சாம்பியன் பட்டங்கள்

  • மேக்ஸ்வெல்                             - பிரேசில்                     - 37 சாம்பியன் பட்டங்கள்

  • ஆண்ட்ரஸ் இனியெஸ்டா    - ஸ்பெயின்                 - 37 சாம்பியன் பட்டங்கள்

  • ஜெரார்ட் பிக்                            - ஸ்பெயின்                 - 37 சாம்பியன் பட்டங்கள்

  • செர்ஜியோ புஸ்கெட்ஸ்      - ஸ்பெயின்                 - 36 சாம்பியன் பட்டங்கள்