சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் சையது யாசின் மவுலானா தர்ஹா கந்தூரி விழாவில் லண்டன், துபாய் உள்ளிட்ட வெளி நாட்டினர் உட்பட  பல்லாயிரகணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற இஸ்லாமியர்களின் இறை போதகர் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்ஹா. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் ஆவர். இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மீகத்தை பரப்பியவர் இந்த இறைபோதகர் ஜமாலியா சையது யாசின் மவுலானா.


School Reopening SOP : போதைப்பொருள் எதிர்ப்பு: பள்ளிகள் திறப்பில் எதற்கெல்லாம் முக்கியத்துவம்? வழிகாட்டல் வெளியீடு




இத்தகைய பெருமைக்குரிய இவர் இறுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் 1964 -ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அதனை அடுத்து அவரது பூத உடல் திருமுல்லைவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு அவருக்கு அவரது சீடர்கள் தர்ஹா அமைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் ஆண்டு தோறும் யாசின் மெளலானா இறையடி சேர்ந்த தினத்தன்று கந்தூரி விழா நடைபெறவது வழக்கம். அதன்படி நேற்றிரவு 60-ம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தின் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மவுலானவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Saamaniyan: “இது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அழும் படம்” - ராமராஜனை புகழ்ந்த பிரவீன் காந்தி!




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவத்தை முன்னிட்டு சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது யாசின் மவுலான சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும், ஒற்றுமையையும் போற்றும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


IPL 2024 Final: ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிசிசிஐ.. லட்சக்கணக்கான ரூபாய் வெகுமதி..!