கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அமராவதி ஆற்றில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.


 


 


 




 


கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பக்தர்கள் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


 


 




அதிகாலை முதல் அமராவதி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் நீராடிய பிறகு மஞ்சள் உடையணிந்து தங்களது நேர்த்திக்கடனான அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக அமராவதி ஆற்றில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முக்கிய வீதியில் வழியாக நடந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 


 




 


ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் முதல் நாள் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் அல்லாது அருகாமையில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து இந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாரியம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் நகர போலீசார் பாதுகாப்பு பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியிலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.