சீர்காழி அருகே அனுமந்தபுரம் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி நடைபெற்றும் குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகிகள் முடிவெடுத்து, கோயில் அதற்கான திருப்பணிகளை மேற்கொண்டு வந்தனர்.


1000 பேர் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி; பழனியில் பார்வையாளர்களை கவர்ந்த நடன கலைஞர்கள்




மேலும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிக்கு என புதிதாக தனி சன்னிதியும் அமைத்துள்ளனர். தொடர்ந்து திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று  3-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து. பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன.


TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? - சபாநாயகர் அப்பாவு பதிலடி




பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ICC Trophy: 9 மாதத்தில் 3 முறை! சாம்பியன் மகுடத்தை தொடர்ந்து தவறவிடும் இந்தியா!