பழனியில் ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனை நிகழ்ச்சி, ஐந்து வயது முதல் 50 வரையிலான கலைஞர்கள் நாட்டியம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து.


NEET Exam 2024: நீட் தேர்வு முறை, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை- ஸ்டெட் பை ஸ்டெப் வழிகாட்டி இதோ!




திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக குழந்தைகளின் நடன நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஐந்து வயது முதல் 50 வயது வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர். நடன நாட்டிய நிகழ்ச்சிக்காக சென்னை , பெங்களூர் ,திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து நடன கலைஞர்கள் பழனிக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாட்டியம் ஆடுவதற்கு தகுந்தாற்போல் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து நடனம் ஆடினர். முருகனைப் போற்றி எழுதப்பட்ட பாடல்களான பழனி திருப்புகழ், காவடி சிந்து, சுப்ரபாதம் ஆகியவை 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக குழந்தைகளால் நடனம் ஆடப்பட்டது. இதுவரை நடன நாட்டியத்தோடு காவடி சிந்தையும் இணைத்து ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியது இதுவே முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.


NEET Exam 2024: நீட் தேர்வு முறை, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை- ஸ்டெட் பை ஸ்டெப் வழிகாட்டி இதோ!




Today Movies in TV, February 11: மன்னன் முதல் மாஸ்டர் வரை! டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்களின் முழு விபரம்!


இந்த நிகழ்ச்சியை விர்ஷா உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் செய்து சான்றிதழை வழங்கியது. விர்ஷா உலக சாதனை அமைப்பு ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்சிகளை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளது. நடன நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் தெரிவித்தனர்.