சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயில்; மனைவியுடன் டிடிவி தினகரன் சாமி தரிசனம்!

சட்ட சிக்கல்களை போக்கும் சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, புராதன சிறப்பு வாய்ந்த, மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயிலில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக் கலை அமைப்பைக் கொண்டது.

Continues below advertisement


இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

Iraivan Twitter Review: திகிலோ திகிலு; ரத்தத்தால் குளிப்பாட்டும் ஸ்மைலி கில்லர்; கோர தாண்டவம் ஆடும் ‘இறைவன்’?- ட்விட்டர் விமர்சனம்


இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 24 -ம் தேதி வெகு விமர்சையாக ஹெலிகாப்டர் மூலம் விமான கலசங்களுக்கு மலர் தூவப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரது மனைவி அனுராதா உடன் வருகை வந்தார். 

Chandramukhi 2 Twitter Review: என்னப்பா.. சந்திரமுகி 2ஐ நம்பலாமா... ட்விட்டர் வாசிகளின் விமர்சனம் இதோ!


அவருக்கு சட்டநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற டிடிவி. தினகரன் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டநாதர், திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.

அவருக்கு சிவாச்சாரியார்கள் கோயில் பிரசாதத்தை வழங்கினர். அவருடன் அமமுக பொது துணை பொது செயலாளர் ரங்கசாமி மாவட்டச் செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் கும்பாபிஷேக யாக சாலை அமைக்கும் பணியின்போது பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள்  பார்வையிட்டார்.

Worldcup Squad: உலகக்கோப்பையில் அக்‌ஷர் அவுட்? தமிழக வீரஷ் அஷ்வின் இன்? இன்று வெளியாகிறது இந்திய வீரர்கள் இறுதி பட்டியல்

Continues below advertisement
Sponsored Links by Taboola